VIDEO: 'ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட 1 லட்சம் முகமூடிகளை... கழுவி, காயவைத்து மீண்டும் விற்பனை!'... கொரோனாவால் ஏற்பட்ட முகமூடி தட்டுப்பாடு!... இளைஞர் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு லட்சம் முகமூடிகளைக் கழுவி, காயவைத்து மீண்டும் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர், இம்ரான் ஷேக் என்ற 22 வயது இளைஞர். இவர், அப்பகுதி மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க, அங்கிருக்கும் ஊழியர்கள் பயன்படுத்திய முகமூடிகளை சேகரித்துள்ளார். கொரோனா பீதியால் தற்போது நாடு முழுவதும் முகமூடி தட்டுப்பாடு உருவாகியுள்ள சூழலை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்த எண்ணிய இவர், தான் சேகரித்திருந்த 'பயன்படுத்தப்பட்ட' முகமூடிகளை கழுவி, காயவைத்து மீண்டும் விற்பனை செய்துள்ளார். மேலும், தனது வியாபாரத்திற்காக குடௌன் ஒன்றை பயன்படுத்தியுள்ளார்.

இதனைக் கண்டறிந்த அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், உடனடியாக குடௌனுக்கு விரைந்தது. ஆனால், அவர்கள் அங்கு வருவதற்கு முன்பே, முகமூடிகளை பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் திறந்த வெளியில் இம்ரான் வீசியுள்ளார். இதைத் தொடர்ந்து, இம்ரான் ஷேக்-ஐ காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட முகமூடிகளை பாதுகாப்பான முறையில் அழிக்க அதிகாரிகள் ஆவண செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

 

MUMBAI, CORONAVIRUS, MASKS, SALES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்