டூவீலரை டெம்போவாக பயன்படுத்தும் இளைஞர்.. வைரலான வீடியோ.. போலீஸ் போட்ட கமெண்ட் தான் வெயிட்டே..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇருசக்கர வாகனத்தில் அதீத அளவு பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு இளைஞரின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | 126 பயணிகளுடன் விமானம் தரையிங்கும்போது கேட்ட பயங்கர சத்தம்..கொஞ்ச நேரத்துல பரவிய தீ.. பரபரப்பான ஏர்போர்ட்..!
போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மக்கள் இருசக்கர வாகனங்களை வாங்குவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. தனிநபர் பயணங்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் நபர்களுக்கு பல்வேறு விதமான அறிவுரைகளை அரசு வழங்கி வருகின்றன. இருப்பினும் சிலர் அவற்றை கடைபிடிக்காமல் இருப்பதையும் நாம் அன்றாடம் பார்த்துவருகிறோம். அந்த வகையில் இருசக்கர வாகனம் ஒன்றில் அதிக அளவு பொருட்களை ஒருவர் ஏற்றிச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ
அந்த வீடியோவில் ஒரு இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் அடுக்கடுக்காக பொருட்களை ஏற்றியுள்ளார். வாகனத்தின் கால் வைக்கும் பகுதி துவங்கி, ஓட்டுநர் இருக்கை வரையில் பொருட்களை வைத்திருக்கும் அந்த நபர், வண்டியின் பின் பக்கம் இருக்கும் கம்பியில் அமர்ந்தபடி வாகனத்தை ஒட்டிச் செல்கிறார். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் முக்கிய சாலையில் இப்படி ஆபத்தான முறையில் இவர் வண்டி ஓட்டுவது சமூக வலை தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை சாகர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு," என்னுடைய 32 GB போனில் 31.9 GB தரவுகள் சேமிக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். வாகனத்தில் அதிக அளவு பொருட்களை அந்த இளைஞர் ஏற்றிச்செல்வதை பகடி செய்யும் விதமாக சாகர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
கமெண்ட் போட்ட போலீஸ்
இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து தெலுங்கானா மாநில காவல்துறையின் கவனத்திற்கும் இந்த வீடியோ சென்றிருக்கிறது. இதனையடுத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது காவல்துறை.
தெலுங்கானா மாநில காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில்," செல்போன் விபத்தை சந்தித்தால் கூட அதிலிருக்கும் தகவல்களை மீட்டெடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், வாழ்க்கை அப்படிப்பட்டது இல்லை. ஆகவே, உங்களுடைய மற்றும் பிறரின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளவேண்டாம் என வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் 7 லட்சம் பேர் பார்த்துள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Also Read | கிரெடிட் & டெபிட் கார்டு Use பண்றீங்களா.. அமலாகும் டோக்கனைசேஷன் நடைமுறை.. முழுவிபரம்..!
மற்ற செய்திகள்