புதுசா வாங்குன பைக்-கு மாலையை போடுங்க.. டக்குன்னு கணவர் செஞ்ச காரியம்.. எல்லோரும் சிரிச்சிட்டாங்க.. Cute வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதிதாக வாங்கிய பைக்கிற்கு மாலை போடுவதற்கு பதிலாக, ஒருவர் தனது மனைவி கழுத்தில் மாலையை போட போகிறார். இதனால் அவரது மனைவி வெட்கப்பட்டுப்போகிறார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்றைய தொழில்நுட்ப உலகில் கணவன் - மனைவி இடையேயான நெருக்கம் பல்வேறு விவாதங்களுக்கு வித்திடுகிறது. பரஸ்பர புரிதலும், காதலும் மட்டுமே நீடித்த மண வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமைகிறது. எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய இணையை மகிழ்வித்து அதன்மூலம் திருப்தி காணும் தம்பதியர் மட்டுமே பல நாட்கள் கழித்தும் தங்களுடைய காதலை பெரும் விருட்சமாய் வளர்க்க முடிகிறது. வாழ்வின் சிறிய சிறிய கணங்களில் கூட தமது அன்பை வெளிப்படுத்தும் சாமானியர்களை இந்த உலகம் எப்போதும் கொண்டாட தவறுவதில்லை. அப்படியான ஒருவரை பற்றிய வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில், ஒருவர் தனது புது பைக்கை டெலிவரி எடுக்க மனைவியுடன் சென்றிருக்கிறார். அப்போது ஒருவர், புது வண்டிக்கு மாலை கோர்த்து அதனை வண்டியின் உரிமையாளரிடம் கொடுக்கிறார். இதனை அவரது மனைவி பார்த்துக்கொண்டு உள்ளார். மாலையை பணியாளர் போன்ற ஒருவர் கொடுக்க, அதை பெற்றுக்கொண்ட வாகனத்தின் உரிமையாளர் உடனடியாக சென்று அதனை தனது மனைவியின் கழுத்தில் போடப்போகிறார்.
அதனை பார்த்த அங்கிருந்தவர்கள் சிரித்து, மாலையை வண்டிக்கு போடும்படி சொல்லவும் அப்பாவியாக முழிக்கும் அந்த நபர் அதன்பிறகு மாலையை வண்டிக்கு போடுகிறார். எதிர்பாராத நேரத்தில் கணவர் தனக்கு மலையிட வந்ததால், அவரது மனைவி வெட்கத்தில் முகத்தை மூடி சிரிக்கிறார். இந்த நிகழ்வை ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட, அது வைரலாகிவிட்டது. இதுவரையில் இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்வது மட்டும் அல்லாமல், இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு நெட்டிசன்கள்,"இருவருக்கும் 50 வயது இருக்கும் என நினைக்கிறேன். ஆனாலும், அந்த அன்பு மாறவில்லை" என்றும், அந்த அம்மாவின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி அவர்களது வாழ்க்கையில் எப்போதும் இருக்கட்டும்" என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நடக்க இடம் இல்லைன்னா என்ன..? நாங்க தாவுவோம்ல.. ட்ரெயின் கம்பார்ட்மெண்டுக்குள் இளைஞர் செஞ்ச சேட்டை.. வைரலாகும் வீடியோ..!
- 20 வருசமா கல்லூரியில் பியூன் வேலை.. "இப்ப அதே கல்லூரி'ல".. கடின உழைப்பால் நிஜமான கனவு!!
- பி. காம் படிப்பு.. முன்னணி நிறுவனத்தில் வேலை.. எல்லாத்தையும் விட்டுட்டு இளைஞர் எடுத்த ரூட்.. அவங்க மனைவி குடுத்த ஐடியா தான் காரணமாம்!
- சிவன் வேடமிட்டு நடித்த நபர்.. மேடையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!
- வேறு ஒரு ஆணுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்த மனைவி.. நடுராத்திரி கேட்ட அலறல் சத்தம்.. சென்னையில் பரபரப்பு..!
- லாட்டரியில் ஜெயிப்பது எப்படி?.. 20 வருஷமா ஆராய்ச்சி செய்த தாத்தா.. இந்த நம்பருக்கு தான் ஜாக்பாட்-ன்னு சொல்லி அடிச்சிருக்காரு..!
- மூன்று மாடி வீட்டின் மேற்கூரையில்.. "பெட்சீட் வெச்சு போர்த்தி".. ஈரக் கொலையை நடுங்க வைத்த பின்னணி!!
- பாட்டியை கொலை செய்து விட்டு.. 4 மாசமா வீட்டில் வைத்திருந்த இளைஞர்.. அம்மா வேற சப்போர்ட்.. 5 வருசம் கழிச்சு தெரிஞ்ச பின்னணி!!
- Mortuary'ல் இருக்கும் உடலை பார்க்க போன மருத்துவர்.. பையை திறந்ததும் கண்ட அதிர வைக்கும் காட்சி!!
- கடலில் மிதந்த பாட்டில்... அதுக்குள்ள இருந்த ரகசிய செய்தி.. அதை படிச்சுட்டு எழுதியவரை தேடியலையும் நபர்.. திகைக்க வைக்கும் பின்னணி..!