ரயில்வே பிளாட்பார்மில் வந்த தகராறு.. மனைவி தூங்குறவரை காத்திருந்து கணவர் செஞ்ச பயங்கரம்.. CCTV கேமராவை பார்த்து உறைந்துபோன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலை வீசி தேடிவருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | சார்ஜில் கிடந்த போன்.. கொஞ்ச நேரத்துல கேட்ட பயங்கர சத்தம்.. பதறிப்போன குடும்பத்தினர்..!

வாக்குவாதம்

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் சாலை ரயில் நிலையத்துக்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சென்றிருக்கிறார் கணவர் ஒருவர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து தனது குழந்தைகளுக்கு அருகில் அந்த பெண் பிளாட்பார்மில் தூங்கியுள்ளார். அவர் அருகிலேயே காத்திருந்த கணவர் ரயில் வரும்போது மனைவியை இழுத்து ரயில்வே டிராக்கில் வீசியுள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். இதனிடையே அந்த மர்ம நபர் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றிருக்கிறார். இது ரயில்வே நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த சம்பவம் திங்கட்கிழமை காலை 4.10 நடந்திருப்பதாக கூறியுள்ள ரயில்வே காவல்துறையினர், அந்த ஆணுக்கு 30 வயது இருக்கலாம் எனவும் கணித்திருக்கின்றனர்.

சிசிடிவி கேமரா

ரயில்வே காவல்துறையின் துணை கமிஷனர் பாஜிராவ் மகாஜன் இதுபற்றி பேசுகையில்,"சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின்னர் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை அவரது கணவர் அவத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது தண்டவாளத்தில் தள்ளியிருக்கிறார். இதனால் படுகாயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். இதனிடையே அந்த நபர் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு 5 ஆம் எண் பிளாட்பார்மில் இருந்து வெளியேறுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது" என்றார்.

வழக்கு

தப்பிச்சென்ற நபர் தாதர் மற்றும் கல்யாண் செல்லும் ரயிலில் ஏறுவதும் கேமராவில் பதிவாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து அவரை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்மீது IPC 302 (கொலை) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் மனைவியை ஓடும் ரயில் முன்னர் தள்ளிவிட்டு அங்கிருந்த கணவர் தப்பிச் சென்ற சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

Also Read | "தெருவுல நிக்கிறேன்.. உதவி பண்ணுங்க".. முதல்வருக்கு கண்ணீருடன் பாட்டி வச்ச கோரிக்கை.. அடுத்த நாளே ஸ்பாட்டுக்கு போன அதிகாரிகள்.. நெகிழ வைக்கும் பின்னணி..!

MAN, WIFE, TRAIN, MUMBAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்