'புதுமண பெண்ணுக்கு வந்த பல தொலைப்பேசி அழைப்புகள்'... 'அதில் பேசியவர்கள் கேட்ட கேள்வி'... 'உடைந்து நொறுங்கிய இளம்பெண்'... வெளிவந்த கணவனின் கோர முகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கணவனே தான் காதலித்து திருமணம் செய்த பெண்ணிற்கு இப்படி ஒரு கொடுமையைச் செய்வார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

'புதுமண பெண்ணுக்கு வந்த பல தொலைப்பேசி அழைப்புகள்'... 'அதில் பேசியவர்கள் கேட்ட கேள்வி'... 'உடைந்து நொறுங்கிய இளம்பெண்'... வெளிவந்த கணவனின் கோர முகம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தானதில் ஜூனியர் அசிஸ்டெண்டாக வேலை செய்து வருபவர் ரேவந்த். இவரும் திருப்பதி அருகே உள்ள திம்மா நாயுடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளார்கள். இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், அவர்களும் இருவரின் காதலுக்குச் சம்மதம் தெரிவித்தார்கள். இதையடுத்து 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் வெகு விமரிசையாகத் திருமணம் நடைபெற்றதது.

திருமணத்திற்குப் பெண் வீட்டார் சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்து இருவரும் மகிழ்ச்சியாக மண வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில், ஒரு மாதம் இருவரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அதன்பின்னர் தான் கணவன் ரேவந்த்தின் மற்றொரு முகம் அவரது மனைவிக்குத் தெரிய வந்துள்ளது. அதாவது திருமணத்திற்குக் கொடுத்த நகைகள் எல்லாம் பத்தாது, எனக்கு இன்னும் பணம் வேண்டும் எனக் கூறி ரேவந்த் அவரது மனைவியை சித்திரவதை செய்து வந்துள்ளார்.

Man posted intimate pictures with his wife and projected her as a call

காதலித்த கணவனே இப்படி நடந்து கொள்கிறாரே என ரேவந்த்தின் மனைவி அதிர்ச்சி அடைந்த நிலையில், திருமணத்திற்கு வாங்கிய கடனே இன்னும் அதிகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் நான் எப்படி எனது பெற்றோரை மீண்டும் கஷ்டத்தில் ஆழ்த்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனாலும் ரேவந்த் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இருப்பினும் ரேவந்த்தின் மனைவி என்னால் எனது பெற்றோரிடம் சென்று கேட்க முடியாது என மறுத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ரேவந்த், மனைவியைப் பழிவாங்க முடிவு செய்தார். அப்போது தான் அவருக்கு அந்த கொடூர புத்தி வந்துள்ளது. தான் ஆசையாகக் காதலித்து திருமணம் செய்த மனைவி என்று நினைக்காமல், தான் ஒரு பெண்ணை இப்படிச் செய்கிறோமே என்ற குற்ற உணர்வு கூட இல்லாமல், ''ரேவந்த் தனது மனைவியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடு நிறுத்தாமல், தனது மனைவியின் செல்போன் நம்பரைத் தவறான தளத்தில் பதிவிட்டு, விபச்சாரத்திற்குத் தொடர்பு கொள்ளுங்கள் எனப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் திடீரென ரேவந்த்தின் மனைவிக்குப் பலரும் தொடர்பு கொண்டு அசிங்கமாகப் பேசியுள்ளார்கள். அதோடு தவறாகப் பேசி விபச்சாரத்திற்கு அழைத்துள்ளார்கள். இதையெல்லாம் கேட்டு உடைந்து போன ரேவந்த்தின் மனைவி, இதை எல்லாம் செய்தது தனது கணவன் என்பதை அறிந்து மீண்டும் நொறுங்கிப் போனார்.

ஆனால் அதோடு உடைந்து சோகத்தில் உட்காராமல், இவரைப் போன்ற நபர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் காவல்நிலையத்தில் நடந்ததை எல்லாம் கூறி புகார் ஒன்றை அளித்தார். இதையடுத்து ரேவந்த்தை உடனடியாக கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பணத்தின் மீது வந்த ஆசையால், காதலித்து திருமணம் செய்த பெண்ணிற்குக் கணவனே செய்த கொடுமை அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்