"நான் செத்துட்டா உடலை அவங்ககிட்ட கொடுக்கக்கூடாது".. மனைவி மற்றும் மகள் மீது வழக்கு தொடுத்த அப்பா.. திகைக்க வைக்கும் காரணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியை சேர்ந்த ஒருவர் தனது இறப்புக்கு பிறகு தன்னுடைய உடலை மனைவியிடமோ மகளிடமோ ஒப்படைக்க கூடாது என உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள காரணம் தான் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | பிரசவ வலியில் துடித்த ஆதரவற்ற பெண்.. ஓடிச்சென்று பிரசவம் பார்த்த பெண் போலீசுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

டெல்லியை சேர்ந்தவர் கஞ்ச் பிஹாரி பன்சால். 56 வயதான இவர் நேற்று டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பன்சால் தனது மனுவில் தன்னுடைய இறப்பிற்கு பிறகு உடலை மனைவிடமோ, மகள் அல்லது மருமகனிடமோ ஒப்படைக்க கூடாது என உத்தரவிடுமாறு குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தனக்கு மகன் போன்ற இன்னொருவரிடம் தனது உடல் ஒப்படைக்கப்படவேண்டும் என தெரிவித்திருக்கிறார் பன்சால்.

திருத்தம்

டெல்லி அரசு மாநிலத்தில் உள்ள பிணவறைகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. காலங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் இந்த வழிமுறையில் ஒருவர் மரணமடைந்து உடல் பிணவறைக்கு கொண்டுசெல்லப்பட்டால் அங்கிருந்து உடலானது அவருடைய உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். இதனை விதிமுறை 7.1 விளக்கியுள்ளது. பன்சால் இந்த விதிமுறையை எதிர்த்து தான் தற்போது மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

தன்னுடைய மனுவில் பன்சால் தன்னுடைய மரணத்திற்கு பிறகு உடல் கிரிஷ் ஷர்மா என்பவரிடத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஷர்மா தனக்கு மகன் போன்றவர் எனவும் அதில் தெரிவித்திருக்கிறார் பன்சால்.

காரணம்

தனக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் தனது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலை அளித்ததாகவும், அந்த சமயத்தில் தனக்கு ஆதரவாக ஷர்மாவே இருந்ததால் தனது உடலை வாங்க அவரே தகுதிவாய்ந்தவர் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார் பன்சால். மேலும், தனது மகள் வளரும் பருவத்தில் தன்னை அருகில் இருக்கவிடாமல் மனைவி தடுத்து விட்டதாகவும், மகளின் திருமணத்திற்கு கூட தன்னை அழைக்கவில்லை எனவும் இதனால் தன்னுடைய இறப்பிற்கு பிறகு உடலை அவர்களிடத்தில் ஒப்படைக்க கூடாது எனவும் பன்சால் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, இது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கும்படியும் வழக்கு விசாரணை அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்திருக்கிறார்.

Also Read | இனிமே விசா இல்லாமலேயே ரஷ்யாவுக்கு போகலாம்.. விளாடிமிர் புதின் சொன்ன தகவல்.. காரணம் இதுதானா..?

DELHI, DELHI HC, RESTRAIN FAMILY, MAN PLEA TO DELHI HC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்