'இதெல்லாமா 'வாட்ஸ் அப்'ல அனுப்புறது' ...காண்டான 'மனைவி'... 'போலீஸ் வலையில் கணவன்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாட்ஸ் அப் மூலம் மனைவிக்கு முத்தலாக் அனுப்பிய கணவனை,காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்.இவருக்கும் அதே பகுதியை சென்ற பெண்ணிற்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கும் நிலையில்,கடந்த சில வருடங்களாக பிறந்தவீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு,ஷேக்கும் அவரது பெற்றோரும் அந்த பெண்ணை கடுமையாக சித்திரவதை செய்து வந்துள்ளார்கள்.இதனால் அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் தனது உறவினர்கள் வீட்டில்,அந்த பெண் தங்கியிருந்தார்.
இந்நிலையில் பணம் தொடர்பாக மீண்டும் ஷேக்கிற்கும் அவரது மனைவிக்கும் வாட்ஸ் அப்பில் பிரச்னை வெடித்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த ஷேக்வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் முத்தலாக் கூறியுள்ளார்.இதனிடையே கணவனின் மெசேஜை கண்டு அதிர்ந்து போன அந்த பெண்,இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர்,முஸ்லீம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஷேக் மீதும் அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே தலைமறைவாகியுள்ள ஷேக்யை கைது செய்ய,காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வாட்ஸ் அப் மூலம் கணவர் முத்தலாக் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “இவங்கதான் முதல் பெண்”!.. ‘சிறிய விமானத்தில் சென்று பெரியளவில் உலக சாதனை நிகழ்த்திய இந்திய பெண்’!..
- “தன் சாதுர்யத்தால் உயிர் தப்பிய நபர்”!.. ‘அந்த நபரை உரசியபடி சென்ற ரயில்’!.. பரபரப்பான சம்பவம்!
- சீக்கிரம் வாட்ஸ் ஆப்ல இத பண்ணிருங்க, இல்லனா அவ்ளோதான்..! அலெர்ட் செய்த வாட்ஸ் ஆப் நிர்வாகம்!
- 'என்னாது!! இனிமே இந்த போன்லலாம் வாட்ஸ்ஆப் வொர்க் ஆகாதா?'...
- DISTURBING VIDEO: 'நிக்குற இடம் மறந்து போச்சா'...'செல்ஃபி' எடுக்க முயற்சித்தவரின்...'பரிதாப நிலை'!
- ‘விசாரணைக்கு உதவாத இந்த ஆப் எல்லாம் எதுக்கு? தடை பண்ணலாமே?’.. பொள்ளாச்சி வழக்கில் கடுப்பான நீதிமன்றம்!
- ‘தினமும் நைட்ல டிவி-மூவிஸ்..செல்போன்-வீடியோஸ்’.. மனைவியின் செயலால் ஆத்திரத்தில் கணவர் எடுத்த முடிவு!
- ‘நாம பிரிஞ்சடலாம்’.. தற்கொலைக்கு முன் காதலன் அனுப்பிய வீடியோ.. காதலியின் விபரீத முடிவு!
- ‘இதான் கூல் கேப்டன்’.. ஐபிஎல்-லின் வைரல் ட்வீட்.. நெகிழ்ந்த பாட்டி.. உருக்கமான வீடியோ!
- 'மது போதையில் காவலர்களுடன் சண்டையிட்ட நடிகை'...வைரலாகும் வீடியோ!