'அட கடவுளே'... 'கிரெடிட் கார்ட்ல EMI போட்டு வாங்கினேன்'... 'மொபைல் இருக்கும் என பார்சலை பிரித்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்யும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.

இமாச்சலப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள அனு கிராமத்தைச் சேர்ந்தவர் சசி தாக்கூர். இவர் சமீபத்தில், புதிய மொபைல் ஒன்றை வாங்க நினைத்துள்ளார். இதையடுத்து அவர் இணையதளம் ஒன்றில் பிரபல மொபைல் போன்களின்  மாடலை பார்த்து அதற்கு ஆர்டரும் கொடுத்துள்ளார். அந்த செல்போனுக்கான விலை 15 ஆயிரத்தைத் தனது கிரெடிட் கார்டு மூலமாகச் செலுத்தியுள்ளார்.

புதிய மொபைல் வர போகிறது என்ற ஆர்வத்தில் சசி தாக்கூர் இருந்த நிலையில், மொபைல் டெலிவரி செய்யப்படும் நாளும் வந்து புதிய மொபைல் பார்சலும் கைக்கு வந்தது. இதையடுத்து புதிய மாடல் மொபைல் இருந்த பார்சலை ஆசை ஆசையாக சசி தாக்கூர் திறந்து பார்த்த நிலையில் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் புதிய மொபைல் இருக்கும் என நினைத்த பார்சலில் வெங்காயங்கள் தான் இருந்தது. இதையடுத்து கோபத்தின் உச்சிக்குச் சென்ற சசி, குருகிராமில் உள்ள அந்த செல்போன் நிறுவனத்துக்கு போன் செய்து விஷயத்தைக் கூறியுள்ளார். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் அனுப்பிவையுங்கள், 10 நாட்களில் உங்களுக்கு புதிய செல்போன் அனுப்பப்படும் என அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சசி தாக்கூரும் புகார் அனுப்பிவிட்டு புதிய மொபைல் எப்போது வரும் என ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார் சசி தாக்கூர். அதோடு ஆன்லைனில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது எவ்வளவு கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்கு எனக்கு நடந்த சம்பவம் ஒரு உதாரணம் என சசி தாக்கூர் வேதனையுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்