"அதிர்ஷ்டம் அடிச்சா இப்டி அடிக்கணும் போல".. ஆன்லைனில் ஐபோன் 13 ஆர்டர் செய்த வாலிபர்.. ஆனா, பார்சல்'ல வந்ததோ ஜாக்பாட்??!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் உணவு, மளிகை பொருட்கள், உடை, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
நேரடியாக கடைகளுக்கு சென்று நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களை தேர்ந்தெடுத்து அதனை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவதற்கு பதிலாக, ஆன்லைனில் பொறுமையாக தங்களுக்கு தேவையான பொருளைத் தேடி அது பற்றிய விவரங்களை அறிந்து அதனை ஆர்டர் செய்கின்றனர்.
அடுத்த சில தினங்களில், இந்த பொருட்களும் வந்தடையும் என்பதால், மக்கள் பலருக்கும் இந்த ஆன்லைன் ஆர்டர் முறை, மிகவும் வசதியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே வேளையில் ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யும் போது சில குழப்பங்களும் நேராமல் இல்லை. சமீபத்தில் கூட ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் சிலர் பொருட்களை ஆர்டர் செய்த சமயத்தில், பார்சலில் வந்த விஷயம் அவரை கடும் குழப்பத்தில் தான் ஆழ்த்தி இருந்தது.
உதாரணத்திற்கு, டிரோன் கேமரா ஆர்டர் செய்த நபருக்கு உருளைக்கிழங்குகள் பார்சலில் வந்து சேர்ந்தது. அதே போல, இன்னொரு நபரும் விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு சோப் தான் பார்சலாக வந்திருந்தது. ஆன்லைன் ஆர்டர் மூலம் நிறைய வசதிகள் இருந்தாலும் இது போன்ற குழப்பங்களும் நேராமல் இல்லை.
அந்த வகையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு வந்து சேர்ந்த பொருள் தான், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் வலம் வரும் பதிவின் படி, மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர், ஆன்லைன் டெலிவரி நிறுவனம் ஒன்றில் ஐபோன் 13 மாடலை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு வந்த பார்சலில், ஐபோன் 13-க்கு பதிலாக, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 இருந்துள்ளது.
பலருக்கும் சோப், பொம்மை, உருளைக்கிழங்கு என மாறி மாறி வரும் நிலையில், இங்கே ஜாக்பாட் அடிக்கும் அளவுக்கு சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. ஐபோன் 13 சுமார் 50,000 ரூபாய் வரை விலை மதிப்புள்ளதாகும். மறுபக்கம், "ஐபோன் 14" 80,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை மதிப்பு உள்ளதாகும்.
இதனால், அந்த இளைஞருக்கு ஆன்லைன் ஆர்டரில் அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக தான் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இத எப்படியா நான் பறக்க விடுறது??".. ஆர்டர் செஞ்சது ட்ரோன் கேமரா.. "ஆனா பார்சல்'ல வந்தத வெச்சு Fry வேணா பண்ணலாம்"!!
- ஆன்லைனில் போன் ஆர்டர் செய்த பெண்.. "ஆனா, வந்த பார்சல்ல இருந்தது 3 பவுடர் டப்பா".. விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி பின்னணி!!
- பசியுடன் இருந்த கர்ப்பிணி பெண்.. "ஆசையா Sandwich ஆர்டர் பண்ணி, பார்சல தொறந்து பாத்தா" உள்ளே காத்திருந்த 'அதிர்ச்சி'
- "வரும்போது சில்றை கொண்டு வாங்க..".. "ஓகே மேடம்".. ஆர்டர் பண்ண Cake-அ பார்த்து அதிர்ந்த இளம்பெண் 😀
- "ஐபோன் மட்டும் இல்லனா என்ன ஆகி இருக்கும்??.." ராணுவ வீரர் வாழ்க்கையில் நடந்த திருப்பு முனை.. "எப்படி'ங்க நடந்துச்சு??"
- "முதல் ஐபோன்'ல இதுனால தான் அந்த ஆப்ஷன் இல்லயா??.." 15 வருசத்துக்கு அப்புறம் தெரிய வந்த சுவாரஸ்ய தகவல்
- "நான் என்ன கேட்டேன்.. நீங்க எதை அனுப்பிருக்கீங்க?".. ஆன்லைனில் உணவு ஆர்டர் செஞ்சது ஒரு குத்தமா? வைரல் வீடியோ.!
- "ஐ.. நாம ஆர்டர் பண்ண போன் வந்துருச்சு.." பார்சல பிரிச்ச இளைஞருக்கு ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு
- ஒரே ஒரு சின்ன Change.. 600 கோடி லாபத்தை அள்ளிய ஆப்பிள் கம்பெனி.. ஓஹோ.. இதுதான் அந்த சீக்ரெட்டா..!
- கொடுத்த டாக்குமெண்ட் எதுவுமே உண்மை இல்ல.. ‘ஐபோன்’ வாங்க பெண் செஞ்ச காரியம்.. வசமாக சிக்கிய பின் அடுத்தடுத்து வெளிவந்த ஷாக்..!