VIDEO: CAA எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் மீது திடீர் துப்பாக்கி சூடு.. பரபரப்பை கிளப்பிய இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்கோட் வரை பேரணியாக சென்றனர்.

அப்போது துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவர் திடீரென மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் மாணவர் ஒருபர் காயமடைந்தார். உடனே அவரை மீட்டு சக மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய நபரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த நபர் உத்தர பிரதேசத்தில் உள்ள ஜீவார் பகுதியை சேர்ந்த ராம்பக்த கோபால் (19) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவரது பேஸ்புக் பக்கத்தை போலீசார் ஆராய்ந்துள்ளனர். அதில், ‘என்னுடைய இறுதி பயணத்தில், காவி உடையை போர்த்தி ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்புங்கள்’ என்றும், மற்றொரு பதிவில் ‘ஷாகின் பாக், விளையாட்டு முற்று பெறுகிறது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

PROTEST, COLLEGESTUDENTS, JAMIA, CAA, DELHI, INJURED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்