'இப்ப என் ஒயிஃப் வருவா'.. 'விட்றாதீங்க.. அப்றம் ஃபிளைட் செதறிடும்'.. பரபரப்பை ஏற்படுத்திய போன் கால்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த வாரம், டெல்லி சிறப்பு காவல்படைக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், டெல்லியில் உள்ள சர்வதேச இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு சென்று விமானத்தில் தனது மனைவி பயணிக்கவிருப்பதாகவும், ஆனால் அதே சமயம் தனது மனைவி ஒரு பயங்கரவாதி என்று கூறி அதிரவைத்தார்.

மேலும் தனது மனைவி ஒரு தற்கொலைப்படைத் தீவிரவாதி என்றும் அதனால் விமானத்தை வெடித்துச் சிதற வைக்கவிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் போலீஸா பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு, கண்காணித்தனர். ஆனால் இறுதியில் எல்லாம் புரளி எனத் தெரியவந்தது. இதனையடுத்து போன் செய்த நபரை தேடி போலீஸார் விசாரித்தனர்.

அப்போதுதான், போன் செய்த நசுருதீன் என்கிற 29 வயதான இளைஞர், சென்னையில் பை தொழிற்சாலை வைத்திருப்பவர். இவர் தனது நிறுவனத்தின் ஊழியரான ரஃபியா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் ரஃபியா வளைகுடாவிற்கு சென்று வேலை செய்து சம்பாதிக்கலாம் என முடிவு எடுத்து, புறப்பட்டதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் தன் மனைவி ரஃபியா வெளிநாடு செல்வதைத் தடுக்கவே, தான் இவ்வாறு கூறியதாக நசுருதீன் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டதை அடுத்து, நசுருதீன் கைது செய்யப்பட்டார்.

HUSBANDANDWIFE, BIZARRE, DELHI, AIRPORT, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்