கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளிலேயே.. டிராபிக்கில் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்த வாலிபர்.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் நகரின் பெரும் பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து தான் இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால், எதிர்பார்த்த நேரத்தை விட முன்னரே கிளம்பினால் தான் சென்று அடைய முடியும்.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி இருக்கையில், பெங்களூர் டிராபிக்கில் சிக்கிய போது திருமணமான மறுநாளில் மாப்பிள்ளை ஒருவர் காரில் இருந்து தப்பித்து சென்ற சம்பவமும் அதன் பின்னால் உள்ள காரணமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரில் இருந்து இறங்கி ஓடிய வாலிபர்
பெங்களூரை சேர்ந்தவர் விஜய் ஜார்ஜ். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து திருமணமான மறுநாள் தனது மனைவியை அழைத்து கொண்டு காரில் அங்குள்ள சர்ச் ஒன்றில் ஜார்ஜ் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கே சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த சமயத்தில், ஜார்ஜ் வந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.
அந்த சமயத்தில், திடீரென காரின் முன்பக்கம் அமர்ந்திருந்த விஜய் ஜார்ஜ், கதவைத் திறந்து கொண்டு சாலையில் ஓட ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. திடீரென கணவர் இப்படி செய்ததால் அவரது மனைவியும் காரில் இருந்து இறங்கி கணவனை விரட்டி பிடிக்க சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரால் கணவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
Images are subject to © copyright to their respective owners.
இது தான் காரணமா?
மேலும் ஜார்ஜின் மனைவி வீட்டுக்கு திரும்பினாலும் தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே இரு வீட்டாரும் ஜார்ஜை தேடி வந்த சூழலில் அவர் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஜார்ஜின் மனைவி போலீசிடம் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். திருமணமான மறுநாளே இப்படி ஒரு வாலிபர் செய்த விஷயம் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
அதே வேளையில், கணவர் ஜார்ஜ் இப்படி செய்ததற்கான காரணம் குறித்து அவரது மனைவி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பெண்ணுடன் பழக்கம்
விஜய் ஜார்ஜுக்கு திருமணத்திற்கு முன்பாக, கோவாவில் வேலை செய்த சமயத்தில் பெண் ஒருவருடன் பழக்கம் இருந்து வந்ததாகவும், திருமணத்திற்கு முன்பே அது பற்றி தன்னுடைய வருங்கால மனைவியிடம் தெரிவித்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதே போல திருமணத்திற்கு முன்னே அந்த உறவை துண்டித்ததால் ஜார்ஜ்ஜை திருமணம் செய்யவும் அந்த இளம்பெண் சம்மதித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
தொடர்ந்து ஜார்ஜ் மற்றும் இளம் பெண்ணின் திருமணம் சமீபத்தில் நடந்தாலும் அந்த பெண்ணுடன் ஜார்ஜ் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஜார்ஜிடம் சேர்ந்து பழகிய சமயத்தில் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் அந்த பெண்ணின் மிரட்டலுக்கு பயந்து கணவர் ஜார்ஜ் ஓடிவிட்டார் என்றும் அவரது மனைவி கருதுவதாக தெரிவித்துள்ளார். அதே போல விபரீத முடிவை எடுத்துக் கொள்ளும் மனநிலையிலும் இருந்தார் என்றும் பாதுகாப்பான முறையில் திரும்பி வருவார் என நம்பிக்கை இருக்கிறது என்றும் போலீசிடம் அந்த பெண் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "25 வருஷமா சம்பளம் இல்லாம வேலை பார்த்திருக்கேன்".. கணவன் மீது வழக்கு தொடர்ந்த மனைவி.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!
- ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்ட இறந்தவரின் சடலம்.. திடுக்கிடும் பின்னணி.!
- 10 லட்சம் செலவு செய்து வருங்கால மனைவியை வெளிநாடு அனுப்பி வைத்த கணவன்.. வேறொருவரை திருமணம் செய்ததால் பரபரப்பு!!
- சாலையில் சென்றவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் சன்னி தியோல்.. வைரலாகும் வீடியோ..!
- திருமண மேடையில்.. மாலை மாற்றிய சில நிமிடங்களில் மாப்பிள்ளைக்கு நடந்த துயரம்!!.. DJ சத்தம் தான் காரணமா?
- 11 வருடங்களாக இருட்டு அறையில் மனைவியை பூட்டி வைத்த கணவன்.. நீதிமன்ற உதவியுடன் மீட்ட போலீஸ்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!
- கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் விமானம் போலவே கனவு வீட்டை கட்டிய நபர்.. வைரலாகும் வீடியோ.!
- பிரிந்து சென்ற மனைவியை சமாதானப்படுத்த வாட்டர் டேங்கில் ஏறிய கணவன்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு..!
- முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. அதிகாரிகள் முன்னிலையில் காதலியை கரம்பிடித்த 75 வயது முதியவர்.. நெகிழ்ச்சி பின்னணி..!
- "கிட்னி விற்பனைக்கு".. வீட்டு அட்வான்ஸ் கொடுக்க இளைஞர் ஒட்டிய போஸ்டர்.. வைரலாகும் கடைசி லைன்!!