'எல்லாமே ஹெல்மெட்டுக்குள்ள இருக்கு சார்ர்ர்'.. திரும்பிப் பார்க்க வைத்த வைரல் இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது மோட்டார் வாகன திருத்தச் சட்டம். இதனை அடுத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் டெல்லி அருகே, வாகன ஓட்டி ஒருவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டியின் விலையே 15 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், அவரிடம் சரியான ஆவணங்கள் இல்லை எனச் சொல்லி 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், ஒடிசாவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, டெல்லியின் சாராயக் கடை பகுதியில் 25  ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டவுடன் தனது பைக்கை தீவைத்து இளைஞர் ஒருவர் கொளுத்திய சம்பவம் என நாளும் பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

உத்தரபிரதேசத்தின் அலிகர் நகரில், காரில் சென்ற நபர் ஒருவரிடம் ஹெல்மெட் அணியாததால் போலீஸார் அபராதத் தொகையை கட்டும்படி வலியுறுத்தியுள்ளனர். இதனால் தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், ஹெல்மெட் அணிந்து காரை ஓட்டி வருகிறார் அந்த நபர். இதுபற்றி பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர், அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றதற்காக தானும் அபராதம் கட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இப்படி ஒரு சூழலில், குஜராத்தின் வடோதரா நகரைச் சேர்ந்த ராம் ஷா என்பவர் போலீஸாரையே திரும்பிப் பார்க்க வைக்கும் வண்ணமாக, தனது லைசன்ஸ், ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ், புகை மாசு சான்றிதழ் உள்ளிட்டவற்றை பிரிண்ட் செய்து தனது ஹெல்மெட்டில் ஒட்டி லேமினேட் செய்துள்ளார். இதன் காரணமாக அவரது வண்டியை போலீஸார் யாரும் நிறுத்துவதே இல்லை. மாறாக அனைவரிடமும் வைரலாகி வருகிறார் அந்த நபர்.

TRAFFIC, VEHICLE, MOTOR, ROADRULES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்