'4 வயது மகளை, மாடிக்கு அழைச்சுட்டு போனார்.. அப்ப திடீர்னு..' மனைவியின் பகீர் வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கிரெடிட் கார்டுகளைப் பற்றிய பல விதமான கருத்துக்கள் எழுந்து வருகின்றன. அவற்றுள் முக்கியமானது, எளிய மக்களில் இருந்து பெரும் பணக்காரர்கள் வரை கிரெடிட் கார்டு என்றால் ஒரு இனம் புரியாத பயம் தொற்றிக்கொள்வதுதான்.

கிரெடிட் கார்டுகளை வாங்கச் சொல்லி, நேரிலோ டெலி மார்க்கெட்டிங் மூலமாக போனிலோ பேசும் அதிகாரிகள் கிரெடிட் கார்டுகளை வாங்குவதற்கான அடிப்படை வருமான வரம்பு மற்றும் தகுதிகளைச் சொல்வதுண்டு. அதையும் மீறி தன்னால் எந்த அளவுக்கு திறம்பட இ.எம்.ஐ கட்டி அதைச் சரிசெய்ய முடியும் என்கிற சுய பரீசலனை ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது. அப்படித்தான் கிரெடிட் கார்டு கடனைக் கட்ட முடியாமல், டெல்லியில் ஒரு குடும்பமே 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது. இதில் குடும்பத் தலைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுயநினைவு திரும்பிய பிறகு பேசிய குடும்பத் தலைவரின் மனைவி, ‘எனது கணவர் வாங்கி வைத்திருந்த கிரெடிட் கார்டுக்கான கடன் தொகைகள் 8 லட்சம் ரூபாய் கிட்டத்தட்ட வந்ததால், அதைக் கட்ட முடியாமல் நாங்கள் தவித்தோம். அப்போது இறப்பதே மேல் என்று என் கணவர் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படித்தான் அதிகாலை 3.30 மணிக்கு என் 4 வயது மகளை அழைத்துக்கொண்டு 4வது மாடிக்குச் சென்றார். நானும் அவரை பின் தொடர்ந்து சென்றென். அப்போது அவர் என் மகளுடன் குதித்தார். உடனே நானும் யோசிக்காமல் குதித்துவிட்டேன். ஆனால் நானும் என் மகளும் பார்க்கிங்கில் இருந்து இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததால் உயிர் பிழைத்து தொலைத்துவிட்டோம்’ என்று கூறி கதறி அழுதுள்ளார்.

DELHI, SUICIDE, CREDITCARD, HUSBANDANDWIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்