சமோசா பேரு'ல வந்த பிரச்சனை.. "அதுக்காக அவங்களுக்கா ஃபோன் பண்ணி Help கேப்பீங்க".. இணையத்தில் வைரலாகும் சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முதலமைச்சர் ஹெல்ப் லைனுக்கு அழைத்த நபர் ஒருவர் தெரிவித்த புகார் ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

சமோசா பேரு'ல வந்த பிரச்சனை.. "அதுக்காக அவங்களுக்கா ஃபோன் பண்ணி Help கேப்பீங்க".. இணையத்தில் வைரலாகும் சம்பவம்!!
Advertising
>
Advertising

Also Read | "Internet வழியா தான் பழக ஆரம்பிச்சோம்".. ஐரோப்பிய பெண்ணை ராமேஸ்வரத்தில் கரம் பிடித்த மதுரை இளைஞர்.. சுவாரஸ்ய பின்னணி!!

இந்தியாவின் பல மாநிலங்களில், பொது மக்கள் தங்களின் புகாரை தெரிவிப்பிதற்காக முதலமைச்சர் ஹெல்ப் லைன் உள்ளிட்ட பல உதவி எண்கள் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்திலும் முதலமைச்சர் ஹெல்ப் லைன் எண்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

Man helps cm helpline for complain about samosa

இந்த எண்ணுக்கு அழைக்கும் அம்மாநில மக்கள், தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிப்பார்கள். இதன் பின்னர், அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், அந்த மாநிலத்திலுள்ள நபர் ஒருவர், முதலமைச்சர் ஹெல்ப் லைனுக்கு அழைத்து தெரிவித்துள்ள புகார் தான், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வன்ஷ் பகதூர் என்ற நபர் ஒருவர் இந்த ஹெல்ப் லைன் எண்ணுக்கு அழைத்துள்ளார். தொடர்ந்து, சதர்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சமோசா கடையில் இருந்து சமீபத்தில் அந்த நபர் சமோசாக்களை வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், அவருக்கு ஸ்பூன் மற்றும் தட்டுகள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கும் படியும், தனது புகாரில் வன்ஷ் பகதூர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த புகாரையும் முதலமைச்சர் ஹெல்ப் லைன் ஏற்றுக் கொண்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், சம்மந்தப்பட்ட சமோசா கடை மற்றும் புகாரளித்த நபரிடையே பேசி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த சம்பவம் தொடர்பாக தங்களின் கருத்துக்களைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | அணியில் இடம்பெறாத தினேஷ் கார்த்திக்.. கொதித்து எழுந்த கிரிக்கெட் பிரபலங்கள்.. கடைசியில் ரோஹித் கொடுத்த 'பரபரப்பு' விளக்கம்!!

SOMASA, MAN, HELPLINE, COMPLAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்