'ஓட ஓட இளைஞரை விரட்டி வெட்டிக் கொன்ற கொடூரம்'... அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாகன ஓட்டிகள் முன்னிலையில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே ஒருவர், ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ருத்ராரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி அரிவாளுடன் ஓடி வந்த ஒருவர், அந்த நபரை வெட்ட முயற்சித்துள்ளார். இதை கண்ட அந்த நபர் சாலையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடியுள்ளார். ஆனால் அவரை விடாமல் துரத்தி சென்று கொடூரமாக சாலையின் நடுவே வெட்டியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் கொலை செய்தவர் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து உறைந்த வாகன ஓட்டிகள், தத்தமது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டனர். இதுதொடர்பான காட்சிகள் அங்கிருந்தவரின் கைபேசியில் படம்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட நபரின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த நபர் போலக்பூரை சேர்ந்த மகபூப் என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே பல கொலை வழக்குகள் உள்ள நிலையில், முன்பகை காரணமாக கொல்லப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘7 ஆண்டுகள் காத்திருந்து கொலை..’ ‘மகளை பாலியல் வன்கொடுமை செய்தவரை பழி தீர்த்த தந்தை..’
- ‘செங்கல் சூளை அருகே எரிந்த நிலையில் கிடந்த சிறுமி..’ நடந்ததைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்..
- ‘தன் உயிரை பனையம் வைத்து 2 உயிரை காப்பாற்ற 60 அடி கிணற்றில் இறங்கிய காவலர்’.. குவியும் பாராட்டுகள்!
- 'கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த மனைவியால் பரபரப்பு'!
- ‘குழந்தையின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற தாய்..’ தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த கொடூரம்..
- 'மனைவியை தீ வைத்து கொன்ற கணவன்'... 'குழந்தைகள் கண் முன்னே நடந்த பரிதாபம்'!
- ‘வேறு பெண்ணுடன் நடனமாடியதால்’ தகராறு.. ‘கோடரியால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்..’
- 'அறிவுரை கூறிய தாய்க்கு நேர்ந்த கொடூரம்'... 'ஆத்திரத்தில் பட்டதாரி இளைஞர் செய்த விபரீதம்'!
- வீடுபுகுந்து தலையை வெட்டி குப்பையில் வீசிய மர்ம கும்பல்..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- மகனின் காதலுக்கு உதவியதால் நிகழ்ந்த பரிதாபம்.. சரமாரியாக குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தை..