இன்னைக்கு ‘கல்யாண நாள்’!.. மனைவிக்கு காத்திருந்த மிகப்பெரிய ‘சர்ப்ரைஸ்’.. இப்படியொரு ‘கிப்ட்’ கொடுப்பார்னு கனவிலும் நினைக்கல..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமண நாளன்று காதல் மனைவிக்கு கணவர் நிலாவில் இடம் வாங்கி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னைக்கு ‘கல்யாண நாள்’!.. மனைவிக்கு காத்திருந்த மிகப்பெரிய ‘சர்ப்ரைஸ்’.. இப்படியொரு ‘கிப்ட்’ கொடுப்பார்னு கனவிலும் நினைக்கல..!

திருமண நாளன்று மனைவிக்கு கணவர் சேலை, தங்க நகைகள் என பரிசுகள் வாங்கிக் கொடுப்பது வழக்கம். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர் தனது மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கி கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.

Man gifts plot of land on Moon to wife on wedding anniversary

தற்போது பிரேசில் நாட்டில் வசித்து வரும் தர்மேந்திரா, தனது மனைவி சப்னாவுக்கு திருமண நாளன்று பரிசு ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி திருமண நாளன்று கேக் வெட்டியதும் மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு பத்திரத்தை அளித்துள்ளார். அதை அவரது மனைவி சப்னா பிரித்து பார்த்தபோதுதான், தனக்கு நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கிருப்பது தெரியவந்து ஆச்சரியமடைந்துள்ளார். நிலவில் இடம் வாங்கியதற்கான பத்திரத்தின் சான்றிதழை நியூயார்க்கில் உள்ள லூனர் சொசைட்டி என்ற நிறுவனத்தில் தர்மேந்திரா மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த தர்மேந்திரா, ‘எங்கள் திருமண நாளன்று என் மனைவிக்கு ஏதாவது பரிசு வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். எல்லோரும் வழக்கமாக கார், நகை போன்ற பொருட்களை வாங்கி தருகின்றனர். ஆனால் நான் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என எண்ணினேன். அதனால்தான் அவளுக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளித்தேன்’ என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் எவ்வளவு தொகைக்கு இந்த நிலத்தை வாங்கினார் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

கணவரின் சர்ப்ரைஸ் பரிசு குறித்து தெரிவித்த மனைவி சப்னா, ‘எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படி ஒரு பரிசு கொடுப்பார் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவர் இந்த பத்திரித்தை பரிசாக கொடுத்ததும், நிலாவில் இருப்பது போலவே உணர்ந்தேன்.’ என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்