வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்.. ஒரே நாளில் மீனவரை லட்சாதிபதியாக மாற்றிய மீன்.. ஏலத்தில் வாங்க போட்டிபோட்ட வியாபாரிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு அரிய வகை கோல் மீன்கள் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் அவர் ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறி இருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | கோடீஸ்வரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய உலகின் காஸ்ட்லி தண்ணீர் பாட்டில்.. விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!

அரபிக்கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் கேரள மாநிலம் பொதுவாகவே அங்கு பிடிக்கப்படும் மீன்களுக்காக பெயர் போனது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் கேரளாவில் பிடிக்கப்படும் மீன்கள் அனுப்பப்படுகின்றன. கடற்கரை ஓரத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் கடலையே வாழ்வாதாரமாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் மாணு என்னும் மீனவர்.

அதிர்ஷ்டம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள நீண்ட கரை துறைமுகத்தில் வழக்கமாக மாணு மீன் பிடிப்பது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல தனது படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று இருக்கிறார் மாணு. வலையை வீசிவிட்டு காத்திருந்த அவருக்கு கொஞ்ச நேரத்தில் அதிர்ஷ்டமே அந்த வலையில் சிக்கியது. கரைக்கு திரும்ப முடிவெடுத்த மாணு வலையை இழுக்க அதில் அரிய வகை கோல் மீன்கள் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் மாணு.

அவர் வீசிய வலையில் மூன்று கோல் மீன்கள் இருந்திருக்கின்றன. இதனால் சந்தோஷம் அடைந்த அவர் உடனடியாக கரைக்கு திரும்பி இருக்கிறார். இந்தோனேசியா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இந்த கோல் மீன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. விலையுயர்ந்த கடல் உணவுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த மீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கிடைக்கிறது.

உலக மீன் சந்தையில் அதிக மதிப்பு மிக்க இந்த மீன்களில் மருத்துவ குணமும் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே மக்கள் இந்த மீனை வாங்க போட்டி போட்டு வருகின்றனர்.

ஏலம்

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த மீனவரான மாணு பிடித்த மூன்று கோல் மீன்கள் கரைக்கு வந்த உடனேயே வியாபாரிகள் அதனை வாங்க போட்டி போட்டுள்ளனர். மூன்று மீன்களையும் வியாபாரி ஒருவர் 2.5 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். கேரள மீனவர் ஒருவருக்கு அரியவகை கோல் மீன்கள் சிக்கிய சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

KERALA, MAN, COAL FISH, வியாபாரிகள், மீனவர், கோல் மீன்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்