'ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்'... '3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து'... நெஞ்சை நொறுக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாமழை வெள்ளத்தால் பள்ளியில், 3 மாதக் குழந்தையுடன் அடைக்கலம் புகுந்த பெண்ணை தரதரவென இழுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் காண்போரை அதிர செய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஆறுகளில் வெள்ள பேருக்கு ஏற்பட்டு வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துப்புரவுப் பெண் பணியாளர் ஒருவர் தனது 3 மாதக் குழந்தையுடன், தான் பணி செய்யும் பள்ளியில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் அந்த பள்ளியின் கண்காணிப்பாளராக சுமிலா சிங் என்ற பெண் பணியாற்றி வருகிறார். அவருடைய கணவரான ரங்கலால் சிங் என்பவர், பள்ளி தங்கும் விடுதிக்கு வந்து அங்கு அடைக்கலமாகத் தங்கியிருந்த துப்பரவுத் தொழிலாளியை அங்கிருந்து வெளியே செல்லுமாறு மிரட்டியுள்ளார். ஆனால் மழையின் காரணமாக 3 மாதக் குழந்தையுடன் இங்கு தங்கி இருப்பதாகவும், மழையின் தீவிரம் குறைந்தவுடன் வெளியில் செல்வதாகவும் கெஞ்சியுள்ளார்.
ஆனால் ரங்கலால் சிங் அந்தப் பெண்ணை ரதரவென இழுத்து வெளியே தள்ளினார். அவரது உடமைகளையும் வெளியே தூக்கி வீசினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒவ்வொரு வருஷமும் அண்ணன் வருவாரு’.. ‘ஆனா இந்த வருஷம் வரல’ அதனால... நெகிழ்ச்சி அடைய வைத்த பெண் காவலர்..!
- 'வழியெங்கும் கண்ணிவெடி'... 'தேசத்தையே நெகிழ செய்த 'சி.ஆர்.பி.எஃப்' வீரர்கள்'...வைரலாகும் வீடியோ!
- திருமண விருந்தில் குறை.. மணமகன் வீட்டார் புகார்.. அடித்துக்கொன்ற கும்பல்!
- 10-ஆம் வகுப்பு தேர்வறையில் அதிகாரிகள் நடத்திய விதத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு!