எதுக்குப்பா கல்யாணத்து அன்னைக்கே டைவர்ஸ் கேக்குற? மாப்பிள்ளை சொன்னத கேட்டு ஆடிப்போன கோர்ட்டு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீப காலமாக கல்யாணம் ஆன சிறிது காலத்திலேயே விவாகரத்துக்காக நீதிமன்றம் செல்லும் நிகழ்வுகள் அதிகரித்துவருகின்றன. இதையெல்லாம் விடுங்க.. கல்யாணம் நடந்த அன்றே தனக்கு விவாகரத்து வேண்டும் எனக் கூறி மாப்பிள்ளை சண்டையிட்ட சம்பவம் ஒன்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்திருக்கிறது.

Advertising
>
Advertising

பாட்டு பிடிக்கல..

திருமண தினத்தன்று போடப்பட்ட பாட்டிற்கு மணமகள் நடனமாட, அதனால் தான் மனமுடைந்துவிட்டதாகவும் விவாகரத்து வேண்டும் எனவும் மணமகன் நீதிமன்ற படியை மிதித்திருக்கிறார். மணமகள் சார்பிலும் விவாகரத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.

2022 ஆரம்பமே இப்படியா..! டெல்டா-ஒமைக்ரான் கலவையாக உருவான ‘புதிய’ வைரஸ்?.. எந்த நாட்டுல தெரியுமா..?

அப்படி என்ன பாட்டு?

ஒரு பாட்டு ஒரு ஜோடிக்கே வேட்டு  வைத்திருக்கிறது என்றால் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், Mesaytara என்ற சிரியா பாடலை தமிழில் மொழிபெயர்த்தோம் என்றால் இதன் விவகாரம் ஓரளவு புரியும். "நான் ஆதிக்கம் செலுத்துவேன் அல்லது நான் உன்னை கட்டுப்படுத்துவேன்".. எனத் தொடங்கும் அந்தப்பாடலை இசைக்கத் துவங்கியவுடன்.. மணமகள் அதற்கு நடனமாடியிருக்கிறார்.

இதனால் மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைந்ததாகவும், ஒருவேளை மணமகள் தங்களது மகனை தனக்குக்கீழே கட்டுப்படுத்தி வைத்துக்கொள்வார் என நினைத்த மாப்பிள்ளை வீட்டார் இதுபற்றி பேச கொஞ்ச நேரத்தில் கைகலப்பாகியிருக்கிறது.

சத்தியமா இது என்னோடது இல்ல சார்! மண்ணெண்ணெய் ஸ்டவ் உள்ள மறைச்சு வச்சிருந்த பார்சல்! அதிர்ந்துப்போன அதிகாரிகள்

விவாகரத்துதான் ஒரே தீர்வு என இருவீட்டாரும் நினைத்ததால் இப்போது இரு தரப்புமே கோர்ட்டில் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள். இதுமட்டுமல்ல, இதற்கு முன்பும் இதேபோல, திருமண வைபத்தில் இதே பாடலை மணமகள் பாட.. அந்தத் தம்பதியும் அன்றே விவாகரத்து செய்திருக்கிறார்களாம்.

DIVOCE, MARRIAGE, MAN DIVORCES BRIDE, WEDDING, திருமணம், விவாகரத்து

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்