தாத்தாவை அடக்கம் செய்ய 'குழி' தோண்டும்போது... 'பேரன்' சொன்ன ஒன்று... 'அடுத்து' காத்திருந்த 'பேரதிர்ச்சியால்' உறைந்து நிற்கும் 'நண்பர்கள்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தாத்தாவை அடக்கம் செய்ய குழி தோண்டும் போது பேரன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்திலுள்ள ஜன்சாத் பகுதியைச் சேர்ந்த முகம்மது யூசுப் (80) என்பவர் முதுமை காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடைய பேரனான சலிம் மற்றும் அவருடைய நண்பர்கள் தாத்தாவை அடக்கம் செய்ய வேண்டி அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர். அப்போது அடக்கம் செய்ய குழி தோண்டிக் கொண்டிருந்த சலிம் திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உடனடியாக நண்பர்கள் சலீமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன நண்பர்கள் தாத்தாவை அடக்கம் செய்த பின்னர் அருகிலேயே மற்றொரு குழி தோண்டி சலிமையும் அடக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள சலிமின் உறவினர் ஒருவர், "சலிமுக்கு முன்னரே ஏதோ உள்ளுணர்வு கூறியுள்ளது. குழி தோண்டிக்கொண்டிருந்தபோது, மற்றொரு குழியையும் தோண்டுமாறு எங்களிடம் கூறினார். ஆனால், நாங்கள் தோண்டிய மற்றொரு குழி சலிமுக்காக இருக்கும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவருடைய மரணம் இன்னும் எங்களுக்கு பேரதிர்ச்சியாகவே உள்ளது"  எனத் தெரிவித்துள்ளார். பழ வியாபாரம் செய்துவந்த சலீமுக்கு 5 குழந்தைகள் இருப்பது இங்கு மேலும் சோகத்தை ஏற்படுத்துவதாகும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்