'அமெரிக்காவில்' இருந்து வந்த சாஃப்ட்வேர் என்ஜினியர்.. 'ஆசையால்'.. நேர்ந்த 'பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமெரிக்காவிலிருந்து விடுமுறை காலத்தில் மென்பொருள் என்ஜினீயர் ஒருவர், தனது சொந்த ஊரான ஐதராபாத்துக்கு வந்தபோது செய்த பைக் சாகசம், பரிதாபமாக அவரின் உயிரை பறித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

.

45 வயதான அரவிந்த் குமார் பீச்சாரா, விசாரணை என்கிற சாஃப்ட்வேர் இஞ்சினியர் அமெரிக்காவின் டல்லாஸில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் விடுமுறைக்காக தனது நண்பர்களுடன் அண்மையில், ஹைதராபாத்திற்கு வந்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள கொண்ட கொடமகுடா அட்வெஞ்சர் ரிசார்ட்டுக்கு, திங்கள் அன்று சென்ற இவர் அங்குள்ள மலைகளின் மீது ஏறி சாகசம் செய்வதற்கான 4 வீல்கள் கொண்ட பைக்குகளில் ஏறி அமர்ந்து இயக்கத் தொடங்கினார்.

பயிற்சி இல்லாமல் இந்த பைக்கை இயக்குவது கடினம் என்கிற நிலையில், இந்த பைக்கில் ஏறி இயங்கத் தொடங்கிய அரவிந்த், சாகசத்தில் ஈடுபட முயற்சித்துள்ளார். அப்போது பைக், மேடான பகுதியில் ஏறும்போது, முன்புறமாக உள்ள பள்ளத்தில் விழுந்ததில் அரவிந்தின் தலையில் பலத்த அடிபட்டது.

பின்னர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். தனக்கு முன் பின் பயிற்சி இல்லாத அட்வெஞ்சர் வாகனத்தை இயக்கி சாகசத்தில் ஈடுபட்டவர் பரிதாபமாக, உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, HYDERABAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்