சொல்லி வச்ச மாதிரி தினமும் நைட் கட்டான கரெண்ட்.. வசமாக சிக்கிய எலக்ட்ரீஷியன்.. பரபரப்பு பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகிராமம் ஒன்றில் தினமும் இரவு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு பின்னால் உள்ள அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது.
பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள கணேஷ்பூர் கிராமத்தில், கடந்த சில மாதங்களாக தினமும் இரவு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சுமார் 2, 3 மணி நேரம் வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது சாதாரண மின்வெட்டு என மக்கள் நினைத்துள்ளனர்.
ஆனால் இது பல மாதங்களாக தொடர்ந்ததால் கிராம மக்கள் சந்தேகமடைந்தனர். இதனை அடுத்து இதுதொடர்பாக விசாரிக்க தொடங்கியுள்ளனர். அப்போது பக்கத்து கிராமத்தில் இதுபோல் மின்வெட்டு ஏதும் இல்லாதது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மின் வெட்டுக்கான பின்னணியை குறித்து தீவிரமாக விசாரித்துள்ளனர்.
அப்போது அந்தப் பகுதியில் உள்ள எலெக்ட்ரீஷியன் ஒருவர் தன் காதலியை இருட்டில் சந்திக்கப்பதற்காக தினமும் மின் இணைப்பை துண்டித்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அந்த எலெக்ட்ரீஷியனையும், அவரது காதலியையும் பள்ளிக்குள் வைத்து கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். இதனை அடுத்து பிடிபட்ட எலெக்ட்ரீஷியனுக்கு கிராமத்து மக்கள் சரமாரியாக அடி கொடுத்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தெரிவித்த போலீஸ் அதிகாரி விகாஸ் குமார் அசாத், இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரியவந்ததாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் இதுதொடர்பாக புகார் ஏதும் கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். காதலியை இரவில் சந்திக்க ஒரு கிராமத்தையே சில மணி நேரம் எலக்ட்ரீஷியன் இருளில் மூழ்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மலேசிய பெண்ணுடன் காதல்.. "ஜாம் ஜாம்ன்னு கல்யாணமும் முடிஞ்சுது.. ஆனா, அதுக்கப்புறம் தான்.." நெல்லை இளைஞர் போட்ட பிளான்
- ‘இதுதான்யா உண்மையான காதல்’.. காதலிக்கு நடந்த மோசமான விபத்து.. நெட்டிசன்களை உருக வைத்த வீடியோ..!
- சிக்னல் போட்டும் கிளம்பாமல் நின்ற ரயில்.. “என்ன டிரைவரை காணோம்?”.. கடைசியில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!
- சிக்னல் போட்டும் ஏன் ரயில் கிளம்பல..? கையில் உதவி லோகோ பைலட் கொண்டு வந்த பொருள் .. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!
- தமிழகத்தில் அடிக்கடி Power Cut..? காரணம் இதான்.. "ஆனா இனிமே" .. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!
- "அங்கயாச்சும் கிணறு தான்.. ஆனா இங்க.." ஓவர் நைட்டில் நடந்த அபேஸ்.. 500 டன் எடை.. "ஊர் மக்கள் வேற சப்போர்ட் ஆமே.. என்ன நடந்துச்சு?"
- "அரியர் இருக்கு எனக்கு.. அது ஏன் புரியமாட்டங்குது உனக்கு".. இலங்கையில் மாணவர்கள் நூதன போராட்டம்..!
- "இதுவல்லவோ மாமியார் - மருமகள்".. நோட் பண்ணுங்கப்பா.. நெகிழ வைக்கும் வீடியோ..
- சூப்பர் மார்க்கெட் அருகே கிடைத்த காதலன்.. யார் தெரியுமா? இளம்பெண்ணின் நெகிழவைக்கும் 'லவ்' ஸ்டோரி..
- பாழடைந்த கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்.. நீரில் மிதந்த சாக்கு மூட்டை.. திறந்து பார்த்ததுல ஊரே ஆடி போயிடுச்சு