சுப நிகழ்ச்சியில் நடந்த துயரம்.. பதறிப்போன உறவினர்கள்.. நெஞ்சை ரணமாக்கிய வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தில் திருமண நிகழ்ச்சியின்போது ஒருவர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
மருத்துவ உலகில் பல்வேறு உயரங்களை மனித குலம் அடைந்திருந்த போதிலும், சில எதிர்பாராத சோக சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இளம் வயது மனிதர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது சமீப காலங்களில் அதிகரித்திருப்பதை நாம் தொடர்ந்து செய்திகள் வழியாக அறிந்து வருகிறோம். திடீரென கடினமான உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மாரடைப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்தும் வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் சோக சம்பவம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருவதுடன் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது இந்த துயர சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. அந்த வீடியோவில் மணமகனுக்கு உறவினர்கள் அனைவரும் மஞ்சள் பூசுகின்றனர். திருமண சடங்கின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த வைபவத்தில் குடும்பத்தினர் கலந்துகொண்டதாக தெரிகிறது. அப்போது உறவினர் ஒருவர் மணமகனுக்கு மஞ்சள் பூச வருகிறார். மணமகனுக்கு அருகே அவர் அமர்ந்து மஞ்சள் பூசும்போதே திடீரென அவர் சரிந்து கீழே விழுந்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்பி பார்த்திருக்கின்றனர். ஆனாலும் பலன் இல்லாததால் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர். இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதனிடையே உயிரிழந்தவர் பெயர் ரப்பானி எனவும், அவர் குல்சார் ஹவுசில் உள்ள நகைக்கடை வேலை பார்த்து வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ரப்பானி திருமண நிகழ்ச்சியின்போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கல்யாணமாகி 4 நாள் தான் ஆச்சு.. விருந்துக்கு போன புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்..!
- சிம்பிளா திருமணம்.. கல்யாணத்துக்கு வச்சிருந்த பணத்தை ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக கொடுத்த குடிமைப்பணி தம்பதி..!
- மேடையில் தள்ளாடிய மாப்பிள்ளை.. மணப்பெண் எடுத்த முடிவு.. சோகத்தில் முடிந்த கல்யாணம்..!
- அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. குடும்பத்துடன் ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்த இளம்பெண்..!
- மருத்துவராகும் கனவு.. திருமணம் முடிந்த அடுத்த நிமிஷமே லேப் கோட்டுடன் தேர்வுக்கு போன புதுமணப்பெண்.. வீடியோ..!
- தவளை கல்யாணம் கூட கேள்விப்பட்டுருக்கோம்.. ஆனா இது புதுசா இருக்குப்பா.. விநோத சம்பவம்..!
- "எங்க இலைக்கு ஏன் பன்னீர் வைக்கல".. தகராறில் இறங்கிய மாப்பிள்ளை வீட்டினர்..? கல்யாண வீட்டில் நடந்த சோகம்..!
- மாப்பிள்ளை செயலால்.. கல்யாணம் முடிஞ்ச கையோட ஃபயர் ஸ்டேஷன் போன ஜோடி.. வைரலாகும் பின்னணி!!
- இந்த பாட்டு வேண்டாம்.. கல்யாண வீட்டுல வந்த தகராறு.. வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!
- கல்யாணத்துக்கு பொண்ணு தேடியும் கிடைக்கல.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன இளைஞர்.. லெட்டரை பார்த்து ஆச்சர்யமான அதிகாரிகள்..!