'என்ன நடந்தாலும்'.. 'இந்த கம்பிய மட்டும் விடமாட்டேண்டா டேய்'.. 'என்னா கிரவுடு'.. பரவும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை ரயில்களில் பீக் ஹவர்ஸில் பயணிப்பவர்கள், அலுவலகங்களுக்கு செல்லும்போதே நொந்து நூடுல்ஸ் ஆகிதான் செல்ல வேண்டியிருக்கும்.

அந்த அளவுக்கு கூட்ட நெரிசலை சமாளித்து, நமக்கென்று ஒரு தக்க இடத்தைப் பிடித்து, மற்றவர்கள் இடித்துத் தள்ளும்போதும், நகர்த்தும்போதும் அதையெல்லாம் சமாளித்து சர்வைவல் ஆக வேண்டும். இந்த ரூலை புரிந்தவர்களே இப்படியான நேரங்களில் மும்பை பயணிகள் ரயிலில் பயணம் செய்ய முடியும்.

ஆனால், மும்பையில் பயணி ஒருவர், ரயிலின் படிக்கட்டுகளில் நின்றுகொண்டு வந்துள்ளார். ஆனால் சபார்பன் லைனில் உள்ள ஸ்டேஷனில் ரயில் நின்றதும், உள்ளிருந்து வெளியில் இறங்கும் பயணிகள், படியில் நின்றிருந்த பயணியை இடித்துத் தள்ளிக்கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவர் விடாப்பிடியாக ரயிலின் மேலே இருந்த கம்பிகளை இறுக்கமாக பற்றியிருந்திருக்கிறார். ஆனாலும், அவரைத் தூக்கி கிடைமட்டமாகும் வரை தள்ளிவிட்டு மக்கள் இறங்குகின்றனர். அப்போதும் அவர் அந்த கம்பிகளை கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால், அவர் இறங்குபவர்களுக்கு வழிவிடவேண்டும் என இறங்கினால், மீண்டும் இதற்கு முன்பிருந்தே பயணித்து வந்த இவருக்கே இடம் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. மற்றவர்கள் மளமளவென ஏறிவிடுவார்கள். இவருக்கு இடம் கிடைக்காது. இதுதான் அவரின் தந்திர உபாயமாக இருக்க வேண்டும். எனினும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

RAILWAY, INDIANRAILWAYS, VIDEOVIRAL, MUMBAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்