"என் பொண்டாட்டிய என்கூட சேர்த்துவைங்க.. இல்லைன்னா".. மொபைல் டவர் மீது ஏறிய கணவன்.. பதறிப்போன கிராம மக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்கும்படி கணவர் போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | CBSE தேர்வு முடிவுகள்: எல்லா பாடத்துலயும் செண்டம்.. இந்தியாவை திரும்பி பார்க்க வச்ச 2 மாணவிகள்..!

சமீப காலங்களில் கணவன்-மனைவி இடையே நடைபெறும் சிக்கல்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், பரஸ்பர புரிதலும் இல்லற வாழ்க்கையின் அச்சாணியாக விளங்குகிறது. இவை கேள்விக்குறியாகும் போது, கணவன்-மனைவி இடையே பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தினை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் தன்னை சேர்த்துவைக்கும்படி மொபைல் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியிருக்கிறார்.

போராட்டம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்தில் உள்ளது டபாதி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கண்பத் பாகல். இவருக்கும் இவருடைய மனைவிக்கும் சமீபத்தில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார். இடையே, தன்னுடன் வந்து வசிக்கும்படி பாகல் கேட்டும், அந்த பெண்மணி மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சோகமடைந்த பாகல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார்.

இதனிடையே கடந்த புதன்கிழமை அன்று, கண்பத் பாகல் அதே கிராமத்தில் இருந்த மொபைல் டவர் மீது ஏறியிருக்கிறார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. மேலும், கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்குமாறும் அவர் கூச்சலிட்டிருக்கிறார்.

உறுதி

இதனால், டவர் அருகே கூட்டம் கூடியிருக்கிறது. கிராம மக்கள் பாகலை சமாதானம் செய்ய முயற்சித்திருக்கின்றனர். இதனிடையே காவல்துறையினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் அவரை பத்திரமாக கீழே இறக்க முயற்சித்துள்ளனர். இந்நிலையில், தீயணைப்பு படைக்கும் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியே பரபரப்பாக மாறியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஊர்மக்கள் அவரை சமாதானப்படுத்தவே அவர் கீழே இறங்கியுள்ளார். அதன்பிறகு அவரை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் அவருக்கு அறிவுரை வழங்கி பின்னர் அவரை விடுவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | அதிகாலைல ஏற்பட்ட கரண்ட் கட்... உடனே டிரான்ஸ்பார்ம் மேலே ஏறிய ஊழியர்.. படார்னு கேட்ட சத்தத்தால் அதிர்ந்துபோன கிராம மக்கள்..!

MAHARASHTRA, MOBILE PHONE TOWER, WIFE, MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்