"இவருல்லாம் லட்சத்துல ஒருத்தரு".. வயசான அப்பா அம்மாவை தோளில் சுமந்தபடி பாதயாத்திரை போகும் மகன்.. IPS அதிகாரி பகிர்ந்த கலங்கவைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவயதான தாய் மற்றும் தந்தையை தோளில் சுமந்தபடி மகன் ஒருவர் யாத்திரை செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் பலராலும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
பெற்றோர்களை அவர்களது வயதான காலத்தில் பேணிப்பாதுகாப்பது என்பது ஒவ்வொரு மகன் மற்றும் மகள்களுடைய முக்கியமான கடமையாகும். நமக்கான உலகத்தை அமைத்துத்தர ஒவ்வொரு நாளும் போராடிய அவர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள். இருப்பினும் சிலர் வயதான தங்களது தாய், தந்தையரை நிராதரவாக விட்டுவிட்டு செல்வது குறித்தும் நாம் தினந்தோறும் கேள்விப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். இதனிடையே, தன்னுடைய தாய் மற்றும் தந்தையை தோளில் சுமந்தபடி பாதயாத்திரை செல்லும் மகன் ஒருவரின் வீடியோ வெளியாகி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
கன்வார் யாத்திரை
வருடாந்திர கன்வார் யாத்திரை ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 26 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நேரத்தில், ஹரித்வார், கௌமுக் மற்றும் உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி மற்றும் பீகாரில் உள்ள சுல்தங்கஞ்ச் ஆகிய இந்து புனிதத் தலங்களுக்குச் சென்று லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் கங்கை நதியில் நீராடுகிறார்கள். இது ஒவ்வொரு வருடமும் விமர்சையாக நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்கள். அதில், ஒரு பக்தர் தனது அப்பா, அம்மாவை தோளில் சுமந்தபடி வெறுங்காலுடன் யாத்திரையை மேற்கொள்கிறார். தாராசு போல இருக்கும் இருக்கையில் வலப்பக்கம் தனது தாயையும் இடப்பக்கத்தில் தந்தையையும் அமர வைத்து அவர் நடந்து சென்றது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
லட்சத்தில் ஒருத்தர்
இந்நிலையில், இந்த வீடியோவை உத்திரகாண்ட் மாநிலத்தின் DGP ஆன அசோக் குமார் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில்,"இப்போதெல்லாம், வயதான பெற்றோர்கள் வெறுக்கப்படுகிறார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது தங்கள் குழந்தைகளுடன் வாழ அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதே சமூகத்தில், பல்லக்கில் தன் வயதான பெற்றோருடன் கன்வர் யாத்திரை வந்த லட்சக்கணக்கான சிவ பக்தர்களில் ஒருவரான ஷ்ரவன் குமாரும் இருக்கிறார். அவருக்கு என் வணக்கங்கள்" எனக்குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை இதுவரையில் 11,000 பேர் பார்த்துள்ளனர். மேலும், தனது தாய் மற்றும் தந்தையை தோளில் சுமந்து செல்லும் அந்த நபரையும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நடந்ததை வெளில சொல்லிடுவேன்".. நண்பனை மிரட்டிய இளைஞர்... அன்று இரவே போலீசுக்கு வந்த மர்ம போன்கால்.. மெசேஜை பாத்து அதிகாரிகள் ஷாக்.!
- பஜ்ஜி சுட்ட எண்ணெயில்.. 9 வருஷமா ஓடும் கார்.. வியக்க வைக்கும் வாலிபர்.. "ஐடியா'வே சும்மா அமர்க்களமா இருக்கே.."
- சத்தமாக பாட்டுக்கேட்ட மகன்.. சவுண்டை குறைத்த அப்பாவுக்கு நேர்ந்த கதி.. நடுங்கிப்போன குடும்பத்தினர்..!
- இந்தியாவுல இவரு ஒருத்தருக்கு தான் இந்த வகை ரத்தம் இருக்கு.. உலகத்துல மொத்தமே 9 பேர் தான் இப்படி இருக்காங்களாம்..!
- "என் Friend எந்திரிக்கவே இல்ல.. ரூம்ல பாம்பு இருக்கு..சீக்கிரம் வாங்க"..போலீசுக்கு போன் செஞ்ச நபர்.. உண்மையை போட்டு உடைத்த டாக்டர்கள்..!
- "பூஜை போட்டாகணும்..அப்பதான் சரியாகும்".. உடம்பு சரியில்லன்னு அருள்வாக்கு கேக்கப்போன நபர்.. கொஞ்ச நாளில் வந்த மிகப்பெரிய சிக்கல் .!
- கையில லேப்டாப், பைக்'ல Travel.. WFH-ஆ.?." - இணையத்தில் வைரல் ஆகும் ஃபோட்டோவால் சலசலப்பு
- மனைவியின் அக்காவையும் கல்யாணம் செஞ்ச கணவன்.. சந்தேகத்தால் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்..3 நாளுக்கு அப்பறம் வெளியேவந்த உண்மை..!
- "பணம் கூட தர்றோம்..அந்த பேய் பொம்மையை தூக்கிட்டு போய்டுங்க"..கதறிய குடும்பம்.. ஆசைப்பட்டு வாங்கியவருக்கு அடுத்தநாளே காத்திருந்த அதிர்ச்சி.!
- "உங்க Bag'அ செக் பண்ணனும்.." விமானத்தில் ஏறிய பெண்ணுக்கு நடுங்க ஆரம்பித்த கை.. "கடைசி'ல ஒரு Surprise குடுத்தாங்க பாருங்க.."