பத்தினின்னு நிரூபிச்சு காட்டு.. கணவர் வச்ச குரூர டெஸ்ட்.. துடித்துப்போன மனைவி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலத்தில் மனைவி மீது சந்தேகப்பட்டு கணவர் செய்த செயல் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

சந்தேகம்

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை அடுத்த வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தா. இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுவந்ததாகவும் மனைவியின் நடத்தையின் மீது ஆனந்தா சந்தேகப்படுவதே பிரச்சினைகளுக்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர், வீட்டிற்க்கு வந்த ஆனந்தா தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது பத்தினி என்று நிரூபிக்கும்படி மனைவியிடம் தகராறில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

விஷப் பரீட்சை

இதனால் ஆனந்தாவிற்கும் அவருடைய மனைவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றியுள்ளது. அப்போது தனது மனைவியின் கைகளில் சூடத்தை ஏற்றி பத்தினி என நிரூபிக்கும்படி ஆனந்தா சண்டையிட்டதாக தெரிகிறது. மேலும், அவரே அந்தப் பெண்மணியின் கைகளில் சூடத்தினை ஏற்றியதாகவும் தெரிகிறது. இதனால் பெண்மணியின் கைகளில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதை வெளியில் கூறினால் தனக்கு ஆபத்து வரும் எனக் கருதி பேசாமல் இருந்திருக்கிறார் ஆனந்தாவின் மனைவி.

போலீசுக்கு போன தகவல்

இந்நிலையில், கோலார் பகுதியில் இயங்கிவரும் தொண்டு நிறுவனமான அம்பேத்கரா சேவா சமிதியின் தலைவர் கேஎம் சந்தீஸ் என்பவருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியுற்ற சந்தீஸ் உடனடியாக காவல்துறைக்கு இதுபற்றி புகார் அளித்துள்ளார். போலீசுக்கு சென்றால் தனக்கே ஆபத்தாக முடியும் என்பதால் அந்தப் பெண்மணி இதுபற்றி வெளியே பேசவில்லை எனவும் காவல்துறையிடம் சந்தீஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, காவல்துறையினர் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், தற்போது தலைமறைவாகி உள்ள ஆனந்தாவை கைது செய்ய காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

கர்நாடக மாநிலம் கோலாரில் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு அவரது கையில் சூடம் ஏற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

KARNATAKA, KOLAR, HUSBAND, கர்நாடகா, போலீஸ், கோலார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்