“அட இதல்லவா மனிதநேயம்”!.. ரமலான் நோன்பை பார்க்காமல் நோயாளிக்கு ரத்தம் கொடுத்த இளைஞர்! நெகிழ்ச்சியூட்டும் செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நோயாளிக்கு ரத்தம் கொடுக்க வேண்டுமென்பதற்காக ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இஸ்லாமிய இளைஞருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் பனுல்லா அகமது. இவர் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் பனுல்லா மற்றும் அவரது நண்பர் தபாஷுவும் தொண்டு நிறுவனங்கள் மூலம் ரத்ததானமும் செய்து வருகிறார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜன் என்பவருக்கு அவசரமாக 2 யூனிட் ஓ பாசிடிவ் ரத்தம் தேவை என தபாஷுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து, பல இடங்களில் முயற்சி செய்தும் ரத்தம் கிடைக்கவில்லை. இந்நிலையில், தன் நண்பர் பானுல்லாவிடம் சொல்ல தான் நோன்பில் இருந்தாலும் ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார்.

இதையடுத்து, பேசிய பானுல்லா அகமது, “ரத்தம் வேண்டும் என்றதும் நான் கொடுக்க தயாரானேன். இதுகுறித்து எங்கள் மத பெரியவர்களுடன் ஆலோசித்தேன். இந்நிலையில், அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி உதவி செய்ய கூறினர். மேலும் ரத்தம் கொடுத்தபின் உணவு உட்கொள்ள கூறியும் அறிவுரை வழங்கினர்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நோயாளியின் உறவினர் கூறுகையில், “நோன்பை பாதியில் விட்டுவிட்டு பானுல்லா ரத்ததானம் செய்தது தங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

RAMZAN, ASSAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்