"பண பிரச்சனை தீரணும்னா பரிகாரம் பண்ணனும்".. மனைவியின் பேச்சை நம்பி ஆற்றங்கரைக்கு சென்ற கணவர்.. அடுத்த நிமிஷமே நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப்பில் கணவனை கொலை செய்ததாக மனைவி மற்றும் மாமியார் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியையே அதிர வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "என் உண்மையான பெயர் அது இல்ல".. இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு சொல்லிய தகவல்.. ஷாக்-ஆன நெட்டிசன்கள்..!

பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி பகுதியை சேர்ந்தவர் குர்தீப் சிங். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு பரிகாரம் செய்ய சிங்கை அழைத்திருக்கிறார் அவரது மனைவி. அப்போது அந்த பெண்ணின் தாயாரும் உடன் இருந்திருக்கிறார்.

அதிர்ச்சி

அப்போது, குர்தீப் சிங்கை அவரது மனைவி ஆற்றில் தள்ளிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து வீட்டினரிடம் தனது கணவர் ஆற்றில் தவறி விழுந்துவிட்டதாக கூறியுள்ளார் அந்த பெண்மணி. இருப்பினும் சம்பவம் அறிந்து விரைந்துவந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின்னர் முரணாக அவர் பதிலளிக்கவே சந்தேகமடைந்த காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, குர்தீப் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அந்த பெண்மணி தனது கணவர் எப்போதும் தன்மீது சந்தேகப்பட்டதாகவும் அதனால் மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து 2 நாள் விசாரணை காவலில் இருவரையும் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

பரிகாரம்

இந்நிலையில் இதுகுறித்து பேசிய குர்தீப் சிங்கின் தந்தை சந்தோஷ் குமார்," சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். கடந்த ஜூலை 19 ஆம் தேதி எனது மகன் சென்று தனது மனைவியை அழைத்துவந்தார். வீட்டில் நிலவும் பண பிரச்சனையை தீர்க்க ஆற்றங்கரைக்கு சென்று பரிகாரம் செய்யவேண்டும் என மருமகள் கூறினார். அதனாலேயே எனது மகனும் உடன் சென்றார். முதலில் ஆற்றில் அவர் தவறி விழுந்ததாக என்னிடம் கூறப்பட்டது" என்றார். 

இதனிடையே பிரேத பரிசோதனையில் சிங் நீரில் மூழ்கி இறந்தது தெளிவாகியுள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து சிங்கின் மனைவி மற்றும் அவரது மாமியார் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 302 (கொலை), 364 (கடத்தல்), மற்றும் 120-பி (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read | அடுத்தடுத்து கிடைச்ச 2 சாக்குப்பை.. இந்தியாவை நடுங்க வச்ச சம்பவம்.. பொதுமக்களிடம் உதவி கேட்கும் காவல்துறை..!

PUNJAB, CANAL, MAN, WIFE, MOTHER IN LAW, ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்