'தொட்டு தாலி கட்டிய பெண்ணை திருமணம் செய்து கொடுத்த கணவன்'... 'பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்'... திருமணத்திற்கு அடுத்த நாள் அம்பலமான உண்மை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட மனைவியை, கணவரே வேறொரு நபருக்குத் திருமணம் செய்து கொடுத்த நிலையில், முதலிரவுக்குப் பின்னர் அந்த புதுமாப்பிள்ளைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதி தான் சோனு மற்றும் கோமல். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணமும் நடந்தது. இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு இருவரும் வேலை தேடிய நிலையில் இருவருக்கும் சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் இருவரும் கடுமையான மன உளைச்சலில் இருந்தனர். ஒரு கட்டத்தில் எப்படியாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற நிலைக்கு இருவரும் வந்தனர். அப்போது தான், இவர்கள் அப்பகுதியில் உள்ள சுமன் என்ற திருமண தரகரைச் சந்தித்துள்ளனர்.

அவரை சந்தித்த பின் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளனர். அதாவது சோனுவின் மனைவியை, இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, இதனால் நல்ல ஒரு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறோம், நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு, அதன் பின் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் போடப்படும் நகைகள் மற்றும் பணம் போன்றவற்றைக் கொள்ளையடித்துச் செல்வதாக முடிவு செய்துள்ளனர்.

அதன் படி திருமணத் தரகர் சுமன், ரவி என்பவருக்கு கோமலைப் பெண் கேட்டுள்ளார். கோமலுடன் இருந்த கணவர் சோனுவை, தரகர் பெண்ணின் சகோதரர் என்று கூறியுள்ளார். இதையடுத்து, ரவி மற்று கோமலுக்குத் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கான முதலிரவு முடிந்த மறுநாள் விழித்துப் பார்த்த போது, கோமலு காணாமல் போயுள்ளார்.

கோமலு மட்டுமின்றி, வீட்டில் திருமணத்திற்குப் போடப்பட்டிருந்த நகைகள், பணம் எனப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணம் போக, உடனே ரவி குடும்பத்தினர், இது போன்று கோமலு நகைகளுடன் காணாமல் போய்விட்டதாகக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இவர்கள் இருவரும் மட்டுமின்றி, தரகரும் சேர்ந்து தான் இந்த திட்டத்தைப் போட்டுள்ளார் என்பது தெரியவர, போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்