'பெத்த பொண்ணுக்கு நடந்த கொடூரம்'... 'வாயை திறக்காத அம்மா'...'டி.என்.ஏ' சோதனையில் அம்பலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மனநலம் பாதிக்கப்பட்ட சொந்த மகளையே நாசம் செய்த தந்தைக்கு, தூக்கு தண்டனை அளித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோடா அருகே உள்ள நயபுரா பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண், கடந்த 2015-ம் ஆண்டு மே 13-ந் தேதி வீட்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் அந்த மாநிலத்தியே உலுக்கியது. இதையடுத்து படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் பிரதே பரிசோதனை அறிக்கை காவல்துறையினரை மேலும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அந்த அறிக்கையில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது.

இதற்கிடையே அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதால், காவல்துறையினரின் சந்தேக பார்வை பெண்ணின் தந்தை மீது திரும்பியது. அவரை விசாரித்தபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார். இந்தநிலையில் பெண்ணின் தாயிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது தான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியே வந்தன. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, தந்தை உருவில் இருந்த அந்த கொடூரன் தொடர்ந்து கற்பழித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர். மேலும் டி.என்.ஏ. பரிசோதனையிலும் அவர் தான் குற்றவாளி என்பது உறுதியானது. இந்த வழக்கு கோடா போஸ்கோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நீதிபதி அசோக் சவுத்ரி தீர்ப்பு கூறினார். அப்போது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில், இது போன்ற செயல்கள் மனித சமுதாயத்திற்கு முற்றிலும் எதிரான ஒன்றாகும். இந்த குற்றங்கள் மிகவும் கொடூரமான மற்றும் வெட்கக்கேடானது. எனவே குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்

RAPE, SEXUALABUSE, RAJASTHAN, DEATH PENALTY, MENTALLY UNSOUND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்