மிடில் கிளாஸ் பெண்கள் தான் டார்கெட்.. இதுவரை 14 பெண்கள்.‌.. சிக்கிய 54 வயது மன்மதன்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணத்திற்கு வரன் பார்ப்பது எப்போதும் பெரும் வேலைகளையும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கொண்ட விஷயமாகும். பெண் பார்க்க ஊர் ஊராகத் தேடி அலையும் காலம் எல்லாம் இப்பொது பெருமளவில் மாறிவிட்டன. ஒரே கிளிக்கில் மணப்பெண்களை காட்டும் மேட்ரிமோனியை நம்பி பல இளைஞர்களும் படையெடுத்துவருகின்றனர். அதேவேளையில், தங்களது மகளுக்கு ஏற்ற வரனை எளிதாக தேடலாம் என்ற நம்பிக்கையில் பெண்களை பெற்றவர்களும் மேட்ரிமொனியை நாடுகிறார்கள். ஆனால், சில நயவஞ்சகர்கள் இத்தகைய நபர்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை நடத்தி விரைவில் போலீசில் சிக்கிக்கொள்ளவும் செய்கிறார்கள்.

Advertising
>
Advertising

இதென்னடா தங்கத்துக்கு வந்த அதீத மவுசு.. தென்னை மரத்துல தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுற கதையால்ல இருக்கு!

அப்படி 14 பெண்களை மேட்ரிமோனி மூலமாக திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து நகை பணங்களை கைப்பற்றிய 54 வயது நபர் ஒருவர் கைதாகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் பட்குரா போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் ஸ்வாயின். இவருடைய வயது 54. பல பெண்களை திருமணம் செய்திருப்பதாக இவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் போலீஸ் ரமேஷை தேடிவந்த நிலையில் தற்போது அவரை கைது செய்திருக்கின்றனர். விசாரணையில் அவர் சொன்ன விஷயங்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

2 திருமணம்

கைதான ரமேஷ் 1982 ல் முதல்தடவையும் 2002 ஆம் ஆண்டு இரண்டாம் முறையும் திருமணம் செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமேஷ் திருமணம் செய்துகொண்ட பெண்கள் இருவருமே ஒடிசாவை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மூலமாக இந்தத் 5 குழந்தைகள் ரமேஷுக்கு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து திருமணம்

இந்நிலையில், மேட்ரிமோனி வெப்சைட் மூலமாக நடுத்தர வர்க்க, படித்த பெண்களை ரமேஷ் குறிவைத்து செயல்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய புவனேஸ்வர் துணை போலீஸ் கமிஷனர் உமாசங்கர் தாஸ்,"புவனேஸ்வர் துணை போலீஸ் கமிஷனர் உமாசங்கர் தாஸ்,"2002 முதல் 2020 வரை இவர் பல்வேறு திருமண ஒருங்கிணைப்பு இணையதளங்கள் வாயிலாக பல பெண்களை நட்பு வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளார். அப்போதுதான் 6 பேரை திருமணம் செய்துள்ளார். இவர் கடைசியாக திருமணம் செய்துகொண்ட பெண் டெல்லியில் பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவருக்கு எப்படியோ இவரது முந்தைய திருமணங்கள் பற்றி தெரியவந்துள்ளது. அவர் அளித்தப் புகாரின் பேரிலேயே ஒடிசாவில் அந்த நபரை கைது செய்தோம்"என்றார்.

மொத்தம் 14 மேரேஜ்கள்

வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், துணை ராணுவ படை அதிகாரி, பள்ளி ஆசிரியர் என மொத்தம் 14 பெண்களை ரமேஷ் மேட்ரிமோனி வாயிலாக திருமணம் செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பெண்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை கைப்பற்றிவிட்டு வேறு மாநிலத்திற்கு தப்பிச் செல்வதையும் ரமேஷ் வழக்கமாக கொண்டிருந்ததாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி, பஞ்சாப், அசாம், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட 7 மாநிலங்களை சேர்ந்த 14 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையால் தேடப்பட்டுவந்த 54 வயது ரமேஷ் கைதாகியிருப்பது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைதாகி உள்ள ரமேஷ் இதற்கு முன்பும் இரண்டு முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டாக்டர் படிப்புக்கு கல்லூரியில் சீட் வாங்கி தருவது, மருத்துவமனைகள் துவங்க அனுமதி பெற்று தருவது, வேலை, கடன் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியுள்ளதாக அவரை ஏற்கனவே ஐதராபாத், எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்திருந்தாக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் புவனேஸ்வர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட ரமேஷிடம் இருந்து 11 ஏடிஎம் கார்டு, வெவ்வேறு பெயர் கொண்ட 4 ஆதார் அட்டைகள், கல்வி சான்றிதழ்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ‌. 1000 உரிமை தொகை.‌. நகை கடன் தள்ளுபடி சான்றிதழ்.. திடீரென வேகம் எடுக்கும் திமுகவின் அரசியல் டிராக்?

MAN, ARREST, ODISHA, MARRIED 14 WOMENS, பெண்கள், திருமணம், ஒடிசா மாநிலம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்