Sandunes others

யூஸ் பண்ண ஆணுறைகளை கோயில் உண்டியலில் போட்டு வந்த ஆசாமி... வசமாக சிக்கினார்... ஷாக் தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குப்பைகளில் இருந்து சேகரித்த பயன்படுத்திய ஆணுறைகளை பல கோயில் உண்டியல்களில் போட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூஸ் பண்ண ஆணுறைகளை கோயில் உண்டியலில் போட்டு வந்த ஆசாமி... வசமாக சிக்கினார்... ஷாக் தகவல்!
Advertising
>
Advertising

மங்களூருவில் பல கோயில்களின் உண்டியல்களிலும் பயன்படுத்திய ஆணுறைகள் இருந்துள்ளன. இதுதொடர்பாக காவல் துறையினரிடம் கோயில் நிர்வாகங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கோயில் உண்டியலில் யார் இது போல் செய்வது எனத் தெரியாமல் போலீஸார் குழம்பி வந்தனர். அப்படிச் செய்யும் நபரையும் தேடத் தொடங்கினர்.

man arrested for dropping used condoms in temples' donation boxes

ஒரு கோயிலில் இருந்து மட்டும் இல்லை தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த வேறு சில கோயில்களில் இருந்தும் இதே போன்ற புகார்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் பதிவாகத் தொடங்கின. சுமார் 5 கோயில்களில் இருந்து தொடர்ந்து புகார்கள் வரத் தொடங்கியதும் காவல் துறையினர் அப்படிச் செய்யும் நபரை தீவிரமாகத் தேடத் தொடங்கினர்.

மங்களூர் கோராஜானா பகுதியில் உள்ள ஒரு கோயில் உண்டியலில் மர்ம நபர் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் எதையோ போடுவதை சிசிடிவி மூலம் அறிந்து கொண்டனர் போலீஸார். பின்னர் சிசிடிவி புகைப்படத்தை வைத்தே அந்த கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி-க்களை போலீஸார் ஆராயத் தொடங்கினர்.

அப்படியே அந்த மர்ம நபரையும் பிடித்துவிட்டனர். பிடிபட்ட நபரின் பெயர் தேவதாஸ். 62 வயதாகும் தேவதாஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மங்களூருவில் வசித்து வருகிறாராம். சுமார் 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.

கோயில்களில் மட்டுமல்லாது குருத்வாரா, மசூதி எனப் பல வழிபாட்டுத் தலங்களிலும் இது போல் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை வீசிச் சென்றுள்ளார் தேவதாஸ். பல தெருக்களில் இருந்தும் குப்பைத் தொட்டிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பயன்படுத்திய ஆணுறைகளை சேகரித்து வந்ததாகவும் எந்தெந்த வழிபாட்டுத் தலங்களில் எல்லாம் அதை வீசி வந்தார் என்பதையும் அவரே துல்லியமாக ஞாபகம் வைத்து போலீஸாரிடம் தேவதாஸ் தெரிவித்துள்ளார். பல புகார்களின் அடிப்படையில் தற்போது தேவதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

'மஹிந்திரா கார்கள்னாலே ஒரு தனி ருசிதான்..!'- முதுமலை புலியின் சேட்டையை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!

POLICE, USED CONDOMS, TEMPLE DONATION BOXES, DROPPING CONDOMS IN TEMPLES, பயன்படுத்திய ஆணுறை, கோயில் உண்டியல், யூஸ் பண்ண ஆணுறைகள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்