'2 மணி நேரம்'...'சிங்கிள் மந்திரம்' ... 'ரூபாய் எல்லாம் டாலரா மாறும்'...காத்திருந்த நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய ரூபாய் நோட்டை மந்திரம் மூலம் அமெரிக்க டாலர்களாக மாற்றி தருவதாக ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் கம்லூ நையா அலைன். டெல்லியின் நொய்டா பகுதியில் தங்கியிருந்த இவரை நொய்டா காவல்துறை கைது செய்துள்ளது. அலைன் மீது ஏற்கெனவே வேறு ஒரு வழக்கு இருக்கும் நிலையில், தற்போது மோசடி புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய நொய்டா காவல்துறை எஸ்பி வினீத் ஜெய்ஷ்வால் '' டெல்லியை சேர்ந்த ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்ட  அலைன் அதனை அமெரிக்க டாலராக மாற்றி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நபரும் 10 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அலைன் அந்த நபரிடம் வெறும் வெள்ளை காகிதங்களை கொடுத்து கோசடி செய்துள்ளார். அதோடு தான் ஒரு மந்திரம் சொல்லி இருப்பதாகவும், இரண்டு மணி நேரத்திற்கு பிறகுஇவை அனைத்தும் அமெரிக்க டாலராக மாறி விடும் என கூறியுள்ளார். அதனை நம்பி இரன்டு மணி நேரமாக காத்திருந்த அந்த நபருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அலைன் கைது செய்யப்பட்டுள்ளார்'' என காவல்துறை எஸ்பி தெரிவித்துள்ளார்.

இதனிடையே அலைன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்தது 10 லட்ச ரூபாய் பணத்தையும் சில கள்ளநோட்டுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

INDIAN NOTES, US DOLLARS, MAGIC TRICK, NOIDA, DELHI, CAMEROON NATIONAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்