23 வயசுல செஞ்ச கொலை.. 73 வயதில் கைதான நபர்.. 50 வருஷத்துக்கு அப்புறம் ஆதார் கார்டால் சிக்கிய தாத்தா.. திடுக் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலத்தில் 50 வருடங்களுக்கு பின்னர் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அடுத்த போட்டியில இந்த 3 பேரும் விளையாட மாட்டாங்க".. குண்டை தூக்கிப்போட்ட டிராவிட்.. முழு விபரம்..!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சைஜ்பூரில் உள்ள தனுஷியாதரி சமூக குடியிருப்பை சேர்ந்தவர் மணிபென் சுக்லா. இவர் கடந்த 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அப்போது 70 வயதான சுக்லா வீட்டில் இறந்து கிடந்தது சில நாட்களுக்கு பின்னரே அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்திருக்கிறது. அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து காவல்துறையில் அக்கம் பக்கத்தினர் புகாரளிக்க, காவல்துறையினர் சுக்லாவின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கின்றனர்.

அப்போது, சுக்லா கொலை செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து சர்தார்நகர் காவல்துறையினர் இதுகுறித்த விசாரணையில் இறங்கினர். அப்போது, அந்த வீட்டில் தனது சகோதரர்களுடன் குடியிருந்த சீதாராம் படானே என்பவர் மாயமாகியுள்ளதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்திருக்கின்றனர். அவரை கைது செய்ய நினைத்தபோது அவர் அங்கிருந்து தலைமறைவானது தெரியவந்திருக்கிறது.

அதன்பின்னர் வருடங்கள் சென்றும், சீதாராமை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே சில வருடங்களுக்கு முன்னர் காவல்துறையினருக்கு முக்கிய தகவல் கிடைத்திருக்கிறது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமத் நகர் பகுதியில் சீதாராம் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, பிடிவாரண்ட் பெற்ற காவல்துறையினர் சீதாராமை தேடும்போதும் பலன் கிடைக்கவில்லை.

இப்படியான சூழ்நிலையில், சர்தார்நகர் காவல்நிலையத்திற்கு பணிமாற்றம் கிடைத்து சென்றிருக்கிறார் கோஹ்லி எனும் போலீஸ் அதிகாரி. அவர் இந்த வழக்கை தூசுதட்ட, மீண்டும் விசாரணை சூடுபிடித்தது. அப்போது, சீதாராம் எனும் பெயரில் அகமத் நகரில் இருக்கும் நபர்கள் குறித்து ஆதார் தரவுகள் மூலமாக தேட துவங்கியிருக்கிறார் கோஹ்லி. அப்போது ரஞ்சனி கிராமத்தில் சீதாராம் குடும்பத்தினருடன் வசித்து வந்தது தெரியவந்திருக்கிறது. உடனடியாக விரைந்துசென்ற போலீசார் சீதாராமை கைது செய்து சர்தார் நகருக்கு அழைத்து வந்திருக்கின்றனர். தற்போது அவருக்கு 73 வயதாகிறது. இதனிடையே அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | வானத்திலிருந்து விழுந்த மர்ம பெட்டி?.. தெறிச்சு ஓடிய கிராம மக்கள்.. தீயாய் பரவும் வீடியோ..!

MAN, ARREST, MURDER CASE, HELP, AADHAAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்