"ரெண்டு மனைவிங்க கூடயும் மூணு மூணு நாள்.. அந்த 7 வது நாளுக்கு கொடுத்த ஆப்ஷன் தான்".. கணவருக்காக மனைவிகள் போட்ட Agreement!!
முகப்பு > செய்திகள் > இந்தியா மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் சீமா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹரியானாவை சேர்ந்த இன்ஜினீயர் வாலிபர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது.
Images are subject to © copyright to their respective owners
இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த சூழலில், கொரோனா தொற்று உருவானதாக தெரிகிறது. அப்படி ஒரு சூழலில், வேலை காரணமாக மனைவி சீமாவை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு குருகிராமில் அவரது கணவர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், தன்னுடன் பணிபுரிந்து வந்த வேறொரு பெண்ணுடன் சீமாவின் கணவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது. அது மட்டுமில்லாமல், இன்னொரு படி மேலே போய் அந்த பெண்ணை திருமணம் செய்த சீமாவின் கணவர், மனைவிக்கு தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், சீமாவின் கணவர் மற்றும் அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணிற்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
இதற்கிடையில், நீண்ட நாட்களாக தன்னிடம் சரிவர பேசாமல் கணவர் இருந்து வந்ததை சீமா உணர்ந்துள்ளார். தொடர்ந்து கணவர் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்ற போது தான் அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்து வருவதையும் அறிந்து அதிர்ந்து போயுள்ளார் சீமா.
இதனால் நிலைகுலைந்து போன சீமா, தனது கணவனிடம் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்டதாக தகவல்கள் கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து, சீமா, அவரது கணவர் மற்றும் அவரது கணவரின் மற்றொரு மனைவி என மூன்று பேரிடமும் கவுன்சிலிங் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தனது கணவரை சிறைக்கு அனுப்ப மனமில்லாமல் சீமா இருந்து வந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், புதுவித ஒப்பந்தம் ஒன்றையும் போட இரண்டு மனைவிகளும் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.
அதன்படி திங்கள் முதல் புதன் வரை முதல் மனைவியுடனும், வியாழன் முதல் சனி வரை இரண்டாவது மனைவியுடனும் வசிக்க வேண்டும் என்றும் ஞாயிறன்று மட்டும் கணவருக்கு எங்கு இருக்க வேண்டும் என்று விருப்பமோ அங்கே இருந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, கணவருக்கு வரும் சம்பளத்தை சரிபாதியாக இரு மனைவியின் குடும்பத்துக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டதுடன் மட்டுமில்லாமல் கணவர் பெயரில் இருக்கும் இரண்டு பிளாட்களை தலா ஒன்றை இரு மனைவிகளுக்கும் எழுதி தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், இந்த ஒப்பந்தத்தை மீறும் பட்சத்தில் மனைவி கட்டாயம் நீதிமன்றத்தினை நாடி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- போனை எடுக்காத பெண்.. கதவைத் திறந்து உள்ளே போன பணிப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "ரெண்டு பேரு பக்கத்தில இப்டி ஒன்னும் இருந்திருக்கா?"
- 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன கணவர்.. வீட்டிலேயே உடலாக மீட்கப்பட்டதால் அதிர்ந்து போன பெண்!!
- 37 வயது வித்தியாசம்.. காதலித்து திருமணம் செய்த ஜோடி.. குழந்தை பெற்று கொள்ள போவதாக அறிவித்ததால் வைரலாகும் பின்னணி!!
- புதிய தண்ணீர் டேங்கிற்குள் கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள்... விஷயம் தெரிஞ்சு பீதியில் உறைந்த ஊர் மக்கள்!!
- “மோசமானவன்னு சொன்னாங்க.. நான் வாய் தொறக்காம இருந்தது..” மனைவியின் குற்றச்சாட்டு.. மௌனம் கலைத்த நவாஸுதீன் சித்திக்.!
- அன்பு மனைவியை ஃபோட்டோ எடுக்க கணவர் எடுத்த முயற்சி.. மனதை கொள்ளை கொண்ட வீடியோ!!
- 11 வருடங்களாக இருட்டு அறையில் மனைவியை பூட்டி வைத்த கணவன்.. நீதிமன்ற உதவியுடன் மீட்ட போலீஸ்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!
- மனைவியின் ஆசையை நிறைவேற்ற ரூ.7 கோடி செலவில் கோவில் கட்டிய கணவன்.. ராஜஸ்தானில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- பிரிந்து சென்ற மனைவியை சமாதானப்படுத்த வாட்டர் டேங்கில் ஏறிய கணவன்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு..!
- "என் மனைவியும், உங்கள் கணவரும் திருமணம் செஞ்சுகிட்டாங்க".. பாதிக்கப்பட்ட கணவன் & மனைவி எடுத்த பரபரப்பு முடிவு