'ஒத்த காலுல நின்று ஜெயிப்போம்ன்னு சொல்லுவாங்களே அதானா இது'?... 'அதிர்ந்த மேற்கு வங்காளம்'... ஒரே பெயர் 'மம்தா'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவால் திரிணாமூல் காங்கிரசுக்குக் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மம்தா மீண்டும் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளும் பாஜகவில் இணைந்தனர்.

அவரின் தளபதிகளாகச் செயல்பட்ட பலரும் கட்சியிலிருந்து வெளியேறியதால் மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. தற்போது வெளியான தேர்தல் முடிவுகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 203 இடங்களிலும், பாஜக 89 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையைப் பெற்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

மேற்கு வங்கத்தை எப்படியேனும் கைப்பற்றிட பாஜக பல வியூகங்களை வகுத்து, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா நேரடியாகப் பலமுறை பரப்புரை செய்தனர். தேர்தல் பரப்புரையின்போது காலில் காயம் ஏற்பட்டதால் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மம்தா பானர்ஜி.

பல நெருக்கடிகள் தன்னை சூழ்ந்த நிலையிலும் தனி ஒரு ஆளாகத் தேர்தலைச் சந்தித்து தற்போது 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று அசத்தியிருக்கிறார் மம்தா.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்