'5 ரூபாய் சாப்பாடு'... 'கர்ப்பிணி பெண்களுக்கு 731 நாட்கள் விடுமுறை'... திரும்பிப் பார்க்க வைத்த மம்தாவின் தேர்தல் அறிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தச்சூழ்நிலையில் மம்தா பானர்ஜி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்கள்.
மாணவர்களுக்கு 4 சதவீத வட்டியில் 10 இலட்ச ரூபாய்க்கான கடன் அட்டை வழங்கப்படும்
கர்ப்பிணிப் பெண்களுக்கு 731 நாட்கள் பேறுகால விடுமுறை அளிக்கப்படும்
மேற்குவங்க மாநிலத்தில் புதிதாக 5 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
ஏழைகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்
மாநிலத்தின் 1.6 கோடி குடும்பத்திற்கும் குறைந்த பட்ச வருமானமாக மாதம் 500 (பொதுப்பிரிவினர்) மற்றும் 1000 (எஸ்சி/எஸ்டி/ஓபிசி) ரூபாய் வழங்கப்படும்
சிறுகுறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்
ஒன்றரை கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி வந்து ரேசன் பொருட்கள் வழங்கப்படும்
2500 ‘மா’ கேண்டீன்கள் மூலமாக 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும்
அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மம்தா பானர்ஜியின் கட்சியில் இணைந்த ‘பிரபல’ கிரிக்கெட் வீரர்.. வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறக்க திட்டமா..?
- அக்டோபர் 1ம் தேதி முதல் ‘தியேட்டர்கள்’ திறக்கப்படும்.. அதிரடியாக அறிவித்த மாநிலம்..!
- இது சரிபட்டு வராது... போடுறா 'ஜூலை 31' வர லாக்டவுன... அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'!
- 'இதெல்லாம் ரொம்ப 'ஓவர்'... நான் அனுமதிக்கவே மாட்டேன்...முதல்வர் எடுத்த அதிரடி!
- ‘ஒன்லி ரசகுல்லா மட்டும்தான்.. ஒரு ஓட்டு கூட கெடைக்காது.. ஹோக்கே?’.. மோடியை சாடிய மம்தா!