'வாய்க்கு வக்கணையாக சாப்பாடு வேணும், ஆனா அவங்க மனுசங்க இல்லையா'... 'டெலிவரி செய்வோருக்கு வந்த கட்டுப்பாடு'... தீப்பிழம்பாய் கொதித்த நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉணவு விநியோகிக்கும் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நெட்டிசன்களை கொதிப்படையச் செய்துள்ளது.
வீட்டில் இருந்தபடியே நமக்கு விருப்பப்பட்ட உணவை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்வோரின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் வணிகம் என்பது ஆயிரக்கணக்கான கோடிகளைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. விருப்பப்பட்ட உணவைக் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செய்வதில் உணவு விநியோகிக்கும் பணியாளர்களின் பணி என்பது மகத்தானது.
இவ்வாறு உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் இளைஞர்கள் தான். அதைத்தாண்டி குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு வேலை செய்து கொண்டே அந்த பணி நேரத்திற்குப் பின்னர் 40 வயதைக் கடந்த பலரும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு உணவு டெலிவரி செய்யும் சிலருக்கும், உணவை ஆர்டர் செய்பவர்களுக்கும் அவ்வப்போது ஏற்படும் உரசல்கள் பெரும் சர்ச்சையாக மாறுவது உண்டு.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள வணிக வளாகம் ஒன்று, உணவு விநியோகிக்கும் பணியில் உள்ள ஸ்விகி மற்றும் ஸோமோட்டோ பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தக்கூடாது என்றும், படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கட்டுப்பாட்டினை விதித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் மற்றொரு உணவகமோ, உணவு விநியோகிக்கும் பணியாளர்கள் தங்கள் இடத்தில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தத் தடை விதித்திருப்பதும் பலரையும் கொதிப்படையச் செய்துள்ளது. நமக்கு வாய்க்கு ருசியாக உணவு மட்டும் வேண்டும், ஆனால் அவர்களை மனிதர்களாகக் கூட மதிக்க மாட்டோம் எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என நெட்டிசன்கள் பலரும் கொதிப்படைந்துள்ளார்கள்.
உணவை டெலிவரி செய்வோர் எதிர்பார்ப்பது மரியாதையை மட்டுமே அதை ஒழுங்காகக் கொடுத்தால் போதும் எனப் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '2 ஆயிரம் கோடி டிமிக்கி கொடுத்து இருக்காங்க'... 'இனிமேல் இவங்களையும் உள்ள கொண்டு வரப்போறோம்'... ஹோட்டல் உணவு விலை உயருமா?
- 'Zomato துணை நிறுவனர் எடுத்த அதிரடி முடிவு'... 'ட்விட்டரில் CEO போட்ட ட்வீட்'... 'என்னப்பா நடக்குது, குழம்பி போன ஊழியர்கள்'... எதிர்காலம் என்ன?
- செப்டம்பர் 17-க்கு பிறகு இதெல்லாம் ‘ஆர்டர்’ பண்ண முடியாது.. ‘இந்த சேவையை நிறுத்த போறோம்’.. Zomato முக்கிய அறிவிப்பு..!
- 'அது' நடக்குற வரைக்கும்... 'என் வேலை இது தான்...' 'சாதிக்க துடிக்கும் பெண்...' - விஷயத்தை கேள்விப்பட்ட உடனே 'யூடியூபர்' செய்த நெகிழ வைக்கும் காரியம்...!
- 'கஸ்டமருக்கு சாப்பாடு தான் எடுத்திட்டு போறேன்...' அப்படியா...? 'எங்க கொஞ்சம் பேக் ஓப்பன் பண்ணி காட்டுங்க...' - திறந்து பார்த்தபோது தெரிய வந்த உண்மை...!
- 'ரோகித்த எப்படி நீங்க அந்த மாதிரி சொல்லலாம்?.. ரெண்டுல ஒன்னு தெரிஞ்சு ஆகணும்'!.. இணையத்தில் வெடித்த போர்!.. பதறிப்போன Swiggy!.. பகிரங்க மன்னிப்பு!
- 'ஐயோ, சும்மா இல்லீங்க மனசுக்குள்ள அவ்வளவு பயம் இருக்கும்'... 'Swiggy எடுத்திருக்கும் அதிரடி முடிவு'... நெகிழ்ந்துபோன ஊழியர்கள்!
- 'காமராஜின் கண்ணீருக்கு பதில் கிடைத்துள்ளது'... 'ட்விட்டரில் தெறிக்க விட்ட நெட்டிசன்கள்'... 'சொமாட்டோ' விவகாரத்தில் அதிரடி திருப்பம்!
- VIDEO: "அந்த பொண்ணு சொல்றது எல்லாமே பொய்...' 'நடந்த உண்மை இது தான்"... - Zomato டெலிவரி பாய் காமராஜ் கண்ணீர்...! - EXCLUSIVE வீடியோ
- 'Zomato டெலிவரி பாய்கிட்ட நான் கேட்ட ஒரே கேள்வி'... 'என்ன நெனச்சானோ தெரியல, என் மூக்கை உடைச்சிட்டான்'... மாடல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!