"இத பண்ணா போதும்.. கொரோனா டெஸ்ட் பண்ண எப்படி வராங்கனு மட்டும் பாருங்க!".. 'மலேசியா' அறிவித்த 'அற்புத' சலுகை!
முகப்பு > செய்திகள் > இந்தியாமலேசியாவில் புதிதாக 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை 7,819 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்நிய தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 150 மலேசிய ரிங்கிட் மானியமாக வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் அந்நிய தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனையை தானாக முன்வந்து செய்வார்கள் என்று அந்நாட்டு அரசு கணித்துள்ளது.
முன்னதாக மலேசியாவில் உள்ள அந்நிய தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள முதலாளிகள், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் அந்நிய தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு பெரும் தொகை செலவாகும் என்றும் அரசாங்கம் இதற்கான மானியத்தை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை அடுத்து ஒவ்வொரு தொழிலாளருக்கும் தலா 150 ரிங்கிட் மானியமாக வழங்கப்படும் என மத்திய மனிதவள அமைச்சர் சரவணன் அறிவித்துள்ளார். இதேபோல் மலேசியாவில் தங்கும் விடுதியில் சுமார் 30 ஆயிரம் பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுபோக கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறும் 10 ஆயிரம் பேர் வற்புறுத்தப்பட்டிருப்பது, 6 ஆயிரம் ஊழியர்களின் சம்பளம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்க காங்கிரஸ் கமிட்டி குற்றம்சாட்டியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்திய பெண்...! 'உலகமே எங்க தடுப்பூசிக்காக எதிர்பார்த்துட்டு இருக்குது...' சூப்பர் மார்க்கெட்டில் பார்ட் டைம் வேலை பார்த்துட்டே படிச்சேன்...!
- தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்ட கொரோனா!.. ஒரே நாளில் 13 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே
- Video: 'ஒண்ணு' தான் ஷேர் பண்ணி சாப்பிடுங்க... 'பசியுடன்' இருந்த தொழிலாளர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டை... 'தூக்கி' வீசிய அதிகாரி!
- 'இறந்த' பெண்ணின்... 'இறுதிச்சடங்கில்' பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா... 'வழக்கு' பாய்ந்தது!
- 'முகக்கவசம்' கட்டாயம்... பின்படிக்கட்டுகள் 'வழியாக' மட்டுமே ஏற வேண்டும்... பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் உள்ளே!
- சாதாரண இருமலும், தும்மலும் 'கொரோனா' பாதிப்பு அல்ல... அதன் 'காரணம்' இதுதான்: மருத்துவர்கள் விளக்கம்
- 'இந்த' 4 மாவட்டங்கள் தவிர்த்து... தமிழகம் முழுவதும் 'பேருந்துகள்' இயக்கப்படும்!
- “இந்திய மக்கள் தொகையில்”.. “பாதிக்குப் பாதி பேர் கொரோனாவால் பாதிக்கக் கூடும்!”.. “ஜூலை மாதம் தொடக்கத்துல மட்டும்...” ஆய்வறிக்கை சொல்வது என்ன?
- ஈரானில் சாலைகளில் விழுந்து மரணிக்கும் மனிதர்கள்.. கொரோனாவாலா? என்கிற அச்சத்தில் நாட்டு மக்கள்!
- 'வேகமெடுக்கும் கொரோனா'... 'சென்னையில் தீவிரமாகப் போகும் கட்டுப்பாடுகள்'... அமைச்சர் விஜயபாஸ்கர்!