நம்புங்க, சத்தியமா எனக்கு தெரியாது...! ஒரே ஒரு ஃபோட்டோ எடுக்க போய்...' 'இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டுடுச்சே...' - வசமா சிக்கிய 'பிரபல' நடிகை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மலையாள சீரியல் நடிகை நிமிஷா கோவிலுக்கு சொந்தமான படகில் ஏறி புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக கேரளாவில் கோவில்கள் அதிகம். அதோடு, கோவில் பாரம்பரியத்தை போற்றும் வகையில் அந்தந்த கோவிலுக்கு சொந்தமாக நீண்ட பாம்பு வடிவிலான படகுகள் உள்ளன. இந்த படகுகளை கேரள மக்கள் புனிதமாக கருதுகின்றனர்.

அதன்படி, அரன்முலா கோயிலுக்கு சொந்தமான பாம்பு வடிவிலான படகில் கோவில் விதிகளை மீறி பிரபல மலையாள நடிகை நிமிஷா பிஜோ புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் காலில் செருப்பும் அணிந்து கொண்டிருந்தார்.

நிமிஷா அவர்களின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து கேரள தேவஸ்தானம் சார்பில் நிமிஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கேரள போலீசாரும் நிமிஷா மற்றும் அவருக்கு புகைப்படம் எடுக்க உதவி புரிந்த அவரின் நண்பர் மீதும் ஐபிசியின் பிரிவு 153 (வேண்டுமென்றே ஆத்திரமூட்டல் கொடுப்பது), வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கூறிய நிமிஷா, 'பள்ளியோடத்திற்குள் (பாம்பு படகு) நுழைவது தவறு என்று எனக்குத் தெரியாது. நான் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு எதிர்ப்பு வந்த பிறகே எனக்கு இந்த சடங்கு குறித்து தெரியும்.

அதையடுத்து நான் உடனடியாக அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டேன். நான் புகைப்படத்தை நீக்கிய பின்பும் எனக்கு மர்ம நபர்கள் மூலம் அச்சுறுத்தல் வருகிறது' என செய்தியாளர்களிடம் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்