‘நள்ளிரவு முதல் பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்!’.. ‘மெயில், எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் நாளை காலை நிறுத்தம்!’.. விரிவான விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மார்ச் 22-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு (மார்ச் 22)  இரவு 10 மணி வரை பயணிகள் ரயில் இயங்காது என்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் எ மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

தலைவிரித்தாடும் இந்த நூற்றாண்டின் கொடிய நோயான, இந்தியாவின் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக மார்ச் 22-ஆம் தேதி தேசிய ஊரடங்கு உத்தரவினை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக அனைத்து கடைகளும், அலுவலகங்களும், வணிக வளாகங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் அன்றைய தினம் முழு நேரமாக அடைக்கப்படும் என தெரிகிறது. இந்த தகவல்களை இணையவாசிகள் #ModiStrikeOnCorona என்கிற ஹேஷ்டேகின் கீழ் பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்த்தாலே இந்த கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரலாம் என்கிற யோசனையில் இந்த தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இதற்கு பால் முகவர்கள் சங்கம், வணிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஒத்துழைப்பு தருவதாய் குறிப்பிட்டுள்ளன.  இந்த நிலையில்தால் மார்ச் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை பயணிகள் ரயில் இயங்காது என்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என்றும் மத்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

INDIANRAILWAYS, CORONAVIRUSININDIA, MODISTRIKEONCORONA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்