மெத்தைக்கு உள்ள 'பஞ்சு' இருக்கும்னு பார்த்தா...! என்னங்க இதெல்லாம்...? 'யோசிக்கவே இல்ல...' - உடனே போலீஸ் தீ வச்சு கொளுத்திட்டாங்க...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக அணியப்படும் முகக்கவசம் கொண்டு தலையணை தயாரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக   முககவசம் அணிவது கட்டாயமாகபட்டுள்ளது. மேலும் ஒருவர் பயன்படுத்திய முகக்கவசத்தாலும் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பிருப்பதால் முக கவசங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் குசம்பா கிராமத்தில் இந்த மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில், பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை வைத்து மெத்தை தயாரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பருத்தி மற்றும் பிற மூலப்பொருட்களை பயன்படுத்தி மெத்தை தயாரிப்பதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட மெத்தை நிறுவனம் பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை அடைத்து மெத்தை தயாரித்துள்ளனர்.  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, மெத்தை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

மெத்தை தயாரிக்கும் அந்த நிறுவன வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த முக கவசங்களை போலீசார் கைப்பற்றி தீயிட்டு அழித்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு திண்டாடி வரும் நேரத்தில், என்னதான் விழிப்புணர்வு கொடுத்தாலும் நோய் பரப்பும் கிருமிகள் கொண்ட முக கவசங்களை மெத்தை தயாரிப்புக்கு பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்