ஒரு கேர்ள் ஃப்ரண்ட் கெடச்சுடாதா...! 'பெண்புலியை தேடி 3000 கிமீ நடந்த புலி...' 'இன்னும் சிக்கலையே...' - அதுக்கு கைவசம் ஒரு ப்ளான் இருக்கு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா சரணாலயத்தில் வாழ்ந்து வந்த 3 வயது புலி தன் இணையை தேடி சுமார் 3000 கிலோமீட்டர் நடந்தும் அதன் இணையை கண்டுபிடிக்க முடியாத வருத்தத்தில் இருக்கிறது.

                           

இந்தியாவில் அதிகம் புலிகள் உள்ள மாநிலம் மத்தியப் பிரதேசம். அங்கு காடுகளில் மட்டும் 526 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கர்நாடக உத்தரகாண்ட் மகாராஷ்டிரா என்ற வரிசையில்  524 புலிகள், 442 புலிகளும், 312 புலிகளும் வசிக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாக கணடறியப்பட்டுள்ளது.

தற்போது நிகழ்ந்துள்ள ஆச்சரியம் என்னவென்றால், மகாராஷ்டிரா மாநிலம் சரணலாயத்தில் வசித்து வந்த 3 வயதுடைய ஆண் புலியொன்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதன் இருப்பிடத்திலிருந்து இடம்பெயர்ந்து தனக்கான இரையையும், இணையையும் தேடி நடக்க ஆரம்பித்ததுள்ளது.

                   

புலிக்கு ஜிபிஎஸ் பொறுத்தப்பட்டிருந்ததால் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளனர் மகாராஷ்டிரா மாநில வனத்துறை அதிகாரிகள். அதன்படி மகாராஷ்டிராவில் பயணத்தை தொடங்கிய அந்தப் புலி தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் காட்டில் ஜூன் மாதம் தங்கியது. அப்போதே அந்தப் புலி 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்தது தெரிய வந்தது. ஏறக்குறைய மகாராஷ்டிடிராவின் 7 மாவட்டங்கள், தெலங்கானா என சுற்றிய அந்தப் புலி இப்போதும் மீண்டும் மகாராஷ்டிராவின் தியான்கங்கா சரணலாயத்துக்கு வந்துள்ளது. ஆனாலும் அந்த புலிக்கு இதுவரை இணை புலி கிடைக்கவில்லை.

இது குறித்து கூறிய மகாராஷ்டிரா மாநில வனத்துறையின் மூத்த அதிகாரி நிதின் ககோட்கர், தன் இணையை தேடிச்சென்ற புலிக்கு எந்த எல்லையும் பிரச்சனையாக இருக்கவில்லை.அதுமட்டுமில்லாமல் அதற்கு தேவையான இரையும் கிடைத்ததுள்ளது. ஆனால் இந்தப் புலிக்கு இன்னும் இணை கிடைக்காததால், தியான்கங்கா சரணலாயத்தில் பெண் புலியை விடலாமா என ஆலோசித்து வருகிறோம்' எனக்கூறியுள்ளர்.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் எந்தப் புலியும் இதுவரை இத்தனை தூரம் நடந்ததில்லை என்பதால் அதற்கு வாக்கர் என பெயர் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்