சாலையின் ரெண்டு பக்கமும் நிறுத்தப்பட்ட வாகனங்கள்.. "கடைசி'ல சும்மா கெத்தா குடுத்த என்ட்ரி'ய பாக்கணுமே.." வியக்க வைத்த வீடியோ

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அனைவரின் கையிலும் மொபைல் போன் உள்ளது. இதன் மூலம், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் ஒவ்வொரு நாளும் வைரலாவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றையும் நாம் நிறைய கண்டு களித்து வருகிறோம்.

Advertising
>
Advertising

அதே போல, உலகின் எங்காவது ஒரு மூலையியல் நடந்தால் கூட, அங்கே நிற்பவர்கள் வீடியோ அல்லது புகைப்படமாக எடுத்து நிகழ்வினை எடுத்து வெளியிட, மிகவும் வித்தியாசமான சம்பவமாக இருந்தால், பலர் மத்தியிலும் அந்த பதிவு பகிரப்பட்டு வரும்.

அப்படி ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதியில் உள்ள சாலைகளில் மனிதர்கள் வாகனங்களில் செல்லும் போது, சில காட்டு விலங்குகள் கடந்து செல்வதை பலரும் பார்த்திருப்பார்கள். அப்படி நடக்கும் போது, பயந்து செல்லும் சிலரும் வண்டியை நிறுத்தி விட்டு, கொஞ்ச நேரம் காத்திருப்பார்கள். அப்படி இருக்கையில், சில நேரம் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் கூட நேரலாம்.

இப்படி காட்டுப் பகுதி சாலையில் வைத்து நிகழ்ந்த சம்பவம் தான், தற்போது வீடியோவாக இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஒரு பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், சாலையின் இரு பக்கத்தில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் நிறுத்தி வைத்தனர். அந்த சமயத்தில், நடுவே சாலையில் காலியாக இருந்த இடத்தில், புலி ஒன்று மிக கெத்தாக ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் சாலையைக் கடந்து காட்டிற்குள் சென்றது.

இது தொடர்பான நிகழ்வை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்த போது, புலியின் கவனத்தை திருப்பாதீர்கள் என்றும் போலீசார் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. எனினும், இரு பக்கம் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருக்க, நடுவே கம்பீரமாக நடந்து சென்ற புலியின் வீடியோ, தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

 

MAHARASHTRA, TIGER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்