கர்ப்பிணி பொண்ணுன்னு கூட பாக்காம.. முடிய புடிச்சு இழுத்து அடிச்சுருக்காங்க.. வனத்துறை அதிகாரிக்கு நேர்ந்த கொடுமை
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா : கர்ப்பிணி பெண் வனத்துறை அதிகாரி மீது நடக்கும் தாக்குதல் தொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், சதாரா மாவட்டத்தில் பல்சவாடே என்னும் கிராமம் அமைந்துள்ளது. இதனை ஒட்டி வனப்பகுதி ஒன்றும் உள்ளது. இங்குள்ள வனத்துறையில், பெண் அதிகாரி ஒருவர் ரேஞ்சராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இந்த பெண் அதிகாரியை, பல்சவாடே கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர், தன்னுடைய மனைவியுடன் இணைந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
தாக்குதல்
கிராமத்தின் முன்னாள் தலைவரான அந்த நபர், தற்போது உள்ளூர் வன மேலாண்மை கமிட்டியிலும் உறுப்பினராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சம்மந்தப்பட்ட அந்த பெண் அதிகாரி, வனத்துறையின் கீழ் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை, தன்னுடைய அனுமதி இல்லாமல், அழைத்துச் சென்றதன் பெயரில், கோபமடைந்துள்ளார்.
கர்ப்பிணி என்று கூட பார்க்கவில்லை
பின்னர், இது பற்றி, வனத்துறை அதிகாரியை அழைத்து, அந்த கமிட்டி உறுப்பினர் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனது மனைவியை அழைத்துக் கொண்டு, ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து, பெண் அதிகாரியை தாக்கியுள்ளனர். அவர் மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார். அதனைக் கூட பொருட்படுத்தாமல், அவர்கள் இருவரும் தாக்கியுள்ளனர்.
புகார்
அங்கிருந்த தொழிலாளர்கள் யாரும் இதனை தடுக்க முன் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி, கர்ப்பிணி பெண் அதிகாரி ஒருவரை தாக்கும் சம்பவம், அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. மேலும், தன்னை தாக்கியதன் பெயரில், அந்த தம்பதி மீது போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
கணவர் மீதும் தாக்குதல்
இதன் பிறகு, சம்மந்தப்பட்ட இருவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளனர். மேலும், தாக்குதலுக்கு ஆளான பெண் வனத்துறை அதிகாரியின் கணவரும், வனத்துறையில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரையும் அந்த தம்பதியினர் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ட்விட்டரில் கொந்தளிப்பு
இது தொடர்பான வீடியோவை, வனத்துறையில் பணிபுரிந்து வரும் பிரவீன் அங்குசாமி என்பவர், ட்விட்டரில் பகிர்ந்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவுக்கு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிச்சயம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இது போன்ற செய்லகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது' என்றும் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை புலி நடமாட்டம்? ‘கிராம மக்கள் யாரும் வெளிய வர வேண்டாம்’.. வனத்துறை அறிவுறுத்தல்..!
மற்ற செய்திகள்
ஜெயிக்குறமோ, தோக்குறமோ.. மொதல்ல சண்டை செய்யணும்.. அதுக்கு இந்த பையன் தாங்க உதாரணம்.. ஏன் தெரியுமா..?
தொடர்புடைய செய்திகள்
- 80 வயதில் தந்தைக்கு வந்த கல்யாண ஆசை.. கடுப்பான மகன் - சோகத்தில் முடிந்த விபரீத சம்பவம்..!
- பக்கா ஸ்கெட்ச்... பக்கத்து வீடுகளுக்கு பூட்டு... ஏடிஎம்-ஐ ஆட்டையை போட பலே காரியம்!
- 2 குரங்குகள் சேர்ந்து '250 நாய்கள' கொன்னது உண்மை கிடையாது...! ஒட்டுமொத்த இந்தியாவே 'ஷாக்' ஆன சம்பவத்தில் 'அதிரடி' திருப்பம்...!
- குட்டியின் மரணம்... பழிக்குப் பழி வாங்கும் குரங்குகள் கூட்டம்!- ஒரே ஊரில் சுமார் 250 நாய்க்குட்டிகள் பலி..!
- VIDEO: 'ஆளு வயசானவங்க மாதிரி தெரியுது...' 'ஈஸியா அட்டேக் பண்ணிடலாம்னு நினச்ச...' 'சிறுத்தைக்கு கெடச்ச ஷாக்...' 'கெத்து காட்டிய பாட்டி...' - வைரல் வீடியோ...!
- மூணு பேர் 'துப்பாக்கி'யோட வீட்டுக்குள்ள வந்தாங்க... 'எல்லாரையும் கயிறு வச்சு கட்டி போட்டுட்டு'... 'எங்க கண்ணு முன்னாடியே...' - 'வார்த்தை'யால விவரிக்க முடியாத பயங்கரம்...!
- கேரளாவை தொடர்ந்து ‘மற்றொரு’ மாநிலத்தில் பரவிய ஜிகா வைரஸ்.. உடனே சுகாதார குழுவை அனுப்பிய மத்திய அரசு..!
- பயங்கர சத்தமா கேட்ட 'வெடி' சத்தம்...! 'வந்து பார்த்தப்போ எல்லாரும் ஆடி போயிட்டாங்க...' - அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்...!
- 'பத்து வருசமா அனுபவிச்ச வேதனை...' பட்ட கஷ்டத்துக்கெல்லாம் 'ஆதார் கார்டு'னால ஒரு விடிவு பிறந்துருக்கு...! நடந்தது என்ன...? - நெகிழ வைத்த சம்பவம்...!
- ‘ரூ.50 லட்சம் பரிசு’!.. கொரோனா பரவலை தடுக்க ‘புதிய’ முயற்சி.. மகாராஷ்டிரா மாநிலம் அசத்தல் அறிவிப்பு..!