'எப்படி பரபரப்பா இருந்த ஊரு'... 'ஊரடங்கால் முடங்கிப்போன சாலைகள்'... மக்களையே எச்சரிக்கையா இருங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இருப்பினும் சமீப காலங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக மராட்டியம் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஓரளவு தொற்று குறைந்த பின்பு பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றும்படி அரசு நிர்வாகமும் மக்களை வலியுறுத்தி வருகிறது.
அதனடிப்படையில் மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்துவது என அரசு முடிவு செய்தது. இதன்படி மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு அமலுக்கு வந்தது. நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ந்தேதி வரை ஒரு வாரக் காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதனை முன்னிட்டு மக்கள் மதுபான கடைகளில் நேற்று குவிந்தனர். அவர்கள் கொரோனா விதிகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, வரிசையில் நிற்காமல் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு சென்று மதுபானம் வாங்க முற்பட்டனர். ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளான காய்கறி, பழம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பால் பூத் உள்ளிட்டவை திறந்திருக்கும்.
மருந்து பொருட்கள் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு அமலான நிலையில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போன்றவற்றை மூடும்படி உத்தரவிடப்பட்டன.
எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சாலைகள் தற்போது ஆள் ஆரவாரமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கிடையே நாக்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது மற்ற மாநில மக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. கொரோனா இல்லை எனப் பாதுகாப்பு நடைமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டால் கொரோனாவின் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனிமேல் தான் மக்கள் ரொம்ப அலெர்ட்டா இருக்கணும்...' - சென்னையில் ஜெட் வேகத்தில் எகிறும் கொரோனோ...! பிற மாவட்டங்களிலும் கூடிக்கொண்டே வருகிறது... - முழு விவரம் உள்ளே!
- 'இனிமேல் தான் மக்கள் ரொம்ப அலெர்ட்டா இருக்கணும்...' - சென்னையில் சத்தமில்லாம எகிறும் கொரோனோ...! பிற மாவட்டங்களிலும் கூடிக்கொண்டே வருகிறது... - முழு விவரம் உள்ளே!
- “மக்கள் அலர்ட்’டாக இருக்க வேண்டிய நேரம்...” - சென்னையில் சத்தமில்லாம எகிறும் கொரோனோ...! பிற மாவட்டங்களிலும் கூடிக்கொண்டே வருகிறது... - முழு விவரம் உள்ளே!
- ‘யாரு சாமி நீ’!.. ‘ஒரு சான்ட்விட்ச் வாங்கவா ஹெலிகாப்டர் எடுத்து வந்தாரு’.. அதிர்ந்துபோன கடைக்காரர்..!
- #BREAKING: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...!
- 'மீண்டும் சென்னையில் தீவிரமடையும் கொரோனா...' 'தமிழகத்தின்' இன்றைய (10-03-2021) 'கொரோனா' அப்டேட்...!- முழு 'விவரம்' உள்ளே...!
- 'மீண்டும் சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்...' 'தமிழகத்தின்' இன்றைய (09-03-2021) 'கொரோனா' அப்டேட்...!- முழு 'விவரம்' உள்ளே...!
- 'தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு நன்றி...' - கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மு.க ஸ்டாலின்...!
- 'சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு...' 'தமிழகத்தின்' இன்றைய (08-03-2021) 'கொரோனா' அப்டேட்...!- முழு 'விவரம்' உள்ளே...!
- 'சென்னையில் அதிகரிக்கும் கொரோனா...' 'ஒரு ஏரியால 3 பேருக்கு இருந்துச்சுன்னா, உடனே அந்த பகுதியை...' - சென்னை மாநகராட்சியின் புதிய உத்தரவு...!