"ஆக்ஸிஜன் சப்ளை இல்ல... 'ஏரி' பிங்க் நிறத்துல மாறிடுச்சு!".. வல்லுநர்கள் அதிர்ச்சி!.. இயல்புக்கு மாறாக இருக்குனு சொல்றாங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிர மாநிலம், புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி திடீரென பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறத்தில் மாறியுள்ளது மக்களையும், வல்லுநர்களையும் பெரும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
மும்பையிலிருந்து 500 கி.மீ தொலைவில், புல்தானா மாவட்டத்தில் புகழ்பெற்ற லோனார் ஏரி அமைந்திருக்கிறது. இந்த ஏரி கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விண்கல் பூமியைத் தாக்கியதால் ஏற்பட்ட பள்ளத்தால் உருவான ஏரி என்று நிலவியல் வல்லுநர்களால் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வழக்கமாக பச்சை நிறத்தில் காணப்படும் இந்த லோனார் ஏரி, திடீரென பிங்க் நிறத்தில் கடந்த சில நாட்களாக மாறியுள்ளது அப்பகுதி மக்களை பெரும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து, புல்தானா மாவட்ட ஆட்சியர் சுமந்த் ராவத் சந்திரபோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஏரி குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், "உலக அதிசயமாக லோனா ஏரி இ்ப்போது மாறிவிட்டது. பாசிகளால் பச்சை நிறத்தில் இருக்கும் ஏரி பி்ங்க் நிறத்துக்கு மாறிவிட்டது. மைக்ரோபயாலஜிஸ்ட்கள் இதற்கு காரணம் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மகாராஷ்டிரா சுற்றுலா கழகமும் ஏரியின் படத்தை பதிவிட்டு பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறமாக மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ளது
இதுகுறித்து புவியியல் வல்லுநர்கள் கூறுகையில், "லோனா ஏரியின் நிறம் மாறுவது புதிதல்ல. இதற்கு முன்பும் மாறியுள்ளது என்றாலும், பிங்க் நிறத்தில் முழுமையாக மாறியுள்ளது இதுவே முதல்முறை. இந்த ஏரி உப்பு ஏரியாகும். இந்த நீரில் பிஹெச் அளவு 10.5 சதவீதம் இருக்கிறது. மேலும் இந்த நீரில் இருக்கும் பாசிகள், மற்றும் உப்புத்தன்மையே நிறம் மாற காரணமாக இருக்கலாம்.
இந்த ஏரியில் ஒரு மீட்டருக்கு கீழ் ஆக்சிஜன் சப்ளை இருக்காது என்பதால் யாரும் குளிக்கமுடியாது. ஈரானில் உள்ள ஏரி போன்ற தோற்றமுடையது. எப்போதெல்லாம் நீர் சிவப்பு நிறத்தில் மாறுகிறோ அப்போது நீரில் உப்பின் அளவு அதிகரிக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக மழை குறைந்துவிட்டதால், லோனார் ஏரியில் நீரின் அளவும் குறைந்துவிட்டது. இதனால், மழைநீர் சேராததால் உப்பின் அளவு அதிகரித்து இதுபோன்ற பிங்க் நிறமாக மாறியிருக்கலாம். நீரில் உள்ள பாசிகள் இறந்து, உப்பின் தன்மை அதிகரிப்பால் நிறம் மாறியிருக்கலாம் என நினைக்கிறோம்.
இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். நி்ச்சயமாக, மனிதர்களால் நிறத்தை மாற்ற முடியாது. இது நீரில் நடக்கும் உயிரியல் மாற்றம்தான். லாக்டவுன் காலத்தில் யாரும் ஏரியின் பக்கம் வந்திருக்க மாட்டார்கள் என்பதால், இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். இன்னும் சில வாரங்கள் செல்ல, செல்ல மேலும் மாற்றம் அதிகரிக்கும்"
இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முதலிடத்துக்கு' வந்தது 'மும்பை...' சீனாவுக்கு 'டஃப்' கொடுப்போம்ன்னு... சொன்னது 'எதுலன்னு பாருங்க?...'
- 'வீரியம்' கொண்ட வைரசாக 'உருமாறும் கொரோனா...' '41% பேர்' பலியாவதாக 'தகவல்...' 'தமிழகத்தில் பரவுகிறதா?' 'சுகாதாரத்துறையின் விளக்கம் என்ன?'
- '2 நாளுக்கு யாரும் வெளியே வராதிங்க...' 'கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்...' '138 ஆண்டுகளுக்கு' பின் 'மும்பையை' தாக்கும் 'புயல்'...
- ‘பெற்ற தந்தை உடலை பெற மறுத்த மகன்’.. ‘இந்து’ முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த ‘முஸ்லிம்கள்’.. நெகிழ்ச்சி சம்பவம்..!
- "அம்மாடியோவ்... இதுல கொஞ்சம் கூட உண்மையில்லை ..." கடைசில 'ரயில் டிக்கெட்' காசை... நாங்கதான் 'கொடுத்தோம்...' 'மகாராஷ்டிரா' உள்துறை அமைச்சர் கடும் 'குற்றச்சாட்டு...'
- 'அரசு உத்தரவை' காற்றில் பறக்கவிட்ட 'ஐ.டி. நிறுவனம்...' பாதிக்கப்பட்ட '13 ஆயிரம் ஊழியர்கள்...' 'நோட்டிஸ் அனுப்பி கடும் எச்சரிக்கை...'
- 'நிறை மாத கர்ப்பிணி'... 'போகும் வழியில் நடந்த துயரம்'... 'போலீசாரை பதறவைத்த இளம் தம்பதி'!
- "கண்ணிமைக்கும் நொடியில உடல்கள் சிதறிப் போனது!.. கண்ணை மூடினா அந்த காட்சிதான்!".. 16 பேர் இறந்த ரயில் விபத்தில் உயிர் தப்பியவரின் 'உருகவைக்கும்' வாக்குமூலம்!
- 'ஒரு நிமிஷம் போகாதன்னு சொல்லி இருந்தா'... 'பொண்ணு உசுரோட இருந்திருக்குமே'...சென்னை அருகே நடந்த சோகத்தின் உச்சம்!
- 'வேலைக்கு வராதோர் ஊதியத்தை பிடித்தம் செய்யலாம்...' 'உயர்நீதிமன்றத்தின்' உத்தரவால் அதிர்ந்து போன 'மாநில மக்கள்...'