VIDEO: 'ஆளு வயசானவங்க மாதிரி தெரியுது...' 'ஈஸியா அட்டேக் பண்ணிடலாம்னு நினச்ச...' 'சிறுத்தைக்கு கெடச்ச ஷாக்...' 'கெத்து காட்டிய பாட்டி...' - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் வயதான பாட்டி ஒருவர் செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீப நாட்களாக வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவது தொடர்கதையாக உள்ளது. காடுகளை அழிப்பதனாலும், வேட்டை என்கிற பெயரில் சட்ட விரோதமாக வனத்திற்கு சென்று மிருகங்களை வேட்டையாடுவதாலும், வன ஆக்கிரமிப்பினாலும் தொடர்ச்சியாக வன விலங்குகள் மனிதர்கள் புழங்கும் பகுதியில் நடமாட தொடங்கியுள்ளன. இதன்காரணமாக எந்நேரமும் அச்சத்தில் இருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று (29-09-2021) இரவு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோரேகான் (Goregaon) பகுதியில் வயதான பாட்டி ஒருவர் தனது வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு பின்பக்கமாக ஒளிந்துக் கொண்டிருந்த சிறுத்தை திடீரென பாட்டியை தாக்க தொடங்கியது.

சிறுத்தையின் வேகத்திற்கு முன்னால் நிலைதடுமாறி கீழே விழுந்த பாட்டி, தன்னுடைய ஊன்றுகோலை எடுத்து சிறுத்தையை அடித்து விளாசுகிறார். ஊன்றுகோலால் பாட்டி சிறுத்தையை தொடர்ந்து அடித்ததின்  வேகத்தைக் கண்டு மிரண்ட சிறுத்தை அங்கிருந்து வெளியே ஓடுகிறது.

அதன் பின் பாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் வெளியே வந்து எட்டிப் பார்க்கின்றனர். அதற்குள் அந்த சிறுத்தை தப்பித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று விட்டது. தான் வயதானவர் என்ற எந்த எண்ணமும் இல்லாமல், கையில் கிடைத்த பொருளை வைத்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்ட பாட்டியின் வீரம் பாராட்டுக்குரியது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்